UPDATED : அக் 27, 2026 07:09 PM
ADDED : அக் 27, 2026 07:03 PM
ஓசூர்: தமிழக எல்லையிலுள்ள ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடியில், எஸ்.எஸ்.ஐ., ரவிச்சந்திரன் மற்றும் போலீசார், நேற்று (அக்.,26) வாகன சோதனை செய்தனர். அப்போது, பெங்களூருவிலிருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் ஆம்னி பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில், மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த கென்னட் லால்டன் மாவி, 27, என்ற பயணியிடம், போதைக்கு பயன்படுத்தும் வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தன. விசாரணையில் அவர், தான் சென்னை எழும்பூரில் ஒரு ஓட்டலில் பணியாற்றுவதாகவும், போதை மாத்திரைகளை பெங்களூருவிலிருந்து வாங்கி, சென்னைக்கு கொண்டு செல்வதாகவும் கூறினார்.
அவரை பிடித்த போலீசார், ஓசூர் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை கைது செய்த போலீசார், 26,700 ரூபாய் மதிப்புள்ள, 488 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
