ADDED : ஜூலை 03, 2025 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்தங்கரை, ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில், தேசிய மருத்துவர்கள் தின, சிறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. மருத்துவ அலுவலர் எழிலரசி தலைமை வகித்தார். ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் தேவிகா, இளவரசன், பிரபா, பாரதிராஜா,
சதீஷ் ஆகியோருக்கு, நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதில், ஊத்தங்கரை இந்தியன் ரெட் கிராஸ் கிளை பொறுப்பாளர்கள் ரஜினி சங்கர், முனியப்பன், ராம், எஸ்.ஐ., மோகன், ஆடிட்டர் லோகநாதன், உட்பட பலர் மருத்துவர்களை வாழ்த்தினர்.