/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரே 2 மேம்பாலம் தேசிய நெடுஞ்சாலைத்துறை மண் பரிசோதனை
/
ஓசூர் புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரே 2 மேம்பாலம் தேசிய நெடுஞ்சாலைத்துறை மண் பரிசோதனை
ஓசூர் புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரே 2 மேம்பாலம் தேசிய நெடுஞ்சாலைத்துறை மண் பரிசோதனை
ஓசூர் புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரே 2 மேம்பாலம் தேசிய நெடுஞ்சாலைத்துறை மண் பரிசோதனை
ADDED : ஏப் 13, 2025 05:18 AM
ஓசூர்: ஓசூர், புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரே தேசிய நெடுஞ்சாலையில், 2 உயர்மட்ட மேம்பாலம் அமைக்க உள்ள நிலையில், தேசிய நெடுஞ்சாலைத்துறை, 2 நாட்கள் மண் பரிசோதனை செய்துள்-ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஹட்கோ போலீஸ் ஸ்டேஷன் அருகே, கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையோரம், 10 ஏக்கர் நிலத்தில், 50 கோடி ரூபாய் மதிப்பில், ஓசூருக்கு புதிய புற-நகர் பஸ் ஸ்டாண்ட் கட்டப்படு
கிறது. இது பயன்பாட்டிற்கு வந்த பின், பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து, செல்லும் பஸ்கள் தேசிய நெடுஞ்சாலையில் தான் திரும்பி செல்ல வேண்டும். அதனால் பத்தலப்பள்ளி
யிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. ஏற்கனவே பத்தலப்பள்ளி சந்தை பகுதியில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வரு-வதால், பஸ் ஸ்டாண்ட் திறக்கப்பட்டால் வாகன போக்கு
வரத்து பாதித்து, விபத்து அதிகரித்து, உயிரிழப்புகள் ஏற்படும். அதனால், தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்ட, மாநக-ராட்சி நிர்வாகம் மற்றும் வாகன ஓட்டிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதையேற்று, ஓசூர் புதிய பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் நுழையும் பகுதி மற்றும் வெளியேறும் பகுதி என, 2 இடங்களில், 37.93 கோடி ரூபாய் மதிப்பில் இரு மேம்பாலங்கள் அமைக்கப்-பட உள்ளன. இதற்கான டெண்டர் விடப்பட்டு, விரைவில் பணிகள் துவங்க உள்ளன. ஓராண்டு காலத்திற்குள் பால பணி-களை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பாலம் வேலை துவங்குவ-தற்கு முன், மண் பரிசோதனை செய்யும் பணிகள் கடந்த, 2 நாட்க-ளாக நடந்தன. மேம்பாலங்கள் அமைய உள்ள பகுதிகளில் மொத்தம், 4 க்கும் மேற்பட்ட இடங்களில் மண் பரிசோத-னையை, தேசிய நெடுஞ்
சாலைத்துறை மேற்கொண்டுள்ளது. அதனால் கூடிய விரைவில், பால பணிகள் துவங்கும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்-ளனர்.

