/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வேளாண் சார்ந்த தொழில்நுட்பங்கள் குறித்து தேசிய அளவிலான விழிப்புணர்வு பிரசாரம்
/
வேளாண் சார்ந்த தொழில்நுட்பங்கள் குறித்து தேசிய அளவிலான விழிப்புணர்வு பிரசாரம்
வேளாண் சார்ந்த தொழில்நுட்பங்கள் குறித்து தேசிய அளவிலான விழிப்புணர்வு பிரசாரம்
வேளாண் சார்ந்த தொழில்நுட்பங்கள் குறித்து தேசிய அளவிலான விழிப்புணர்வு பிரசாரம்
ADDED : மே 29, 2025 01:14 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், எலுமிச்சங்கிரி வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் சுந்தர்ராஜ், வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுடில்லி இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம், காரீப் பருவத்திற்கான வேளாண் சார்ந்த தொழில்நுட்பங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து, விக்சித் கிரிஷி சங்கல்ப் அபியான் என்ற தேசிய அளவிலான விழிப்புணர்வு பிரசாரம், இன்று (மே 29) முதல் ஜூன் 12 வரை நடக்கிறது. பிரசாரத்தின் நோக்கம் வேளாண் ஆராய்ச்சிகளுக்கும், விவசாயிகளுக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதாகும்.
ஐ.சி.ஏ.ஆர்., நிறுவனங்கள் மற்றும் வேளாண் அறிவியல் மையங்களின் கே.வி.கே., விஞ்ஞானிகள் அடங்கிய, 2,000 குழுக்கள் மற்றும் மாநில வேளாண் மற்றும் சார்புத்துறை அதிகாரிகளுடன் இணைந்து இப்பிரசாரம் இந்தியா முழுவதுமாக செயல்படுத்தப்படுகிறது. இம்முயற்சியின் மூலம், 1.50 கோடி விவசாயிகள் நேரடியாக சந்திக்கப்பட உள்ளனர்.
பிரசாரத்தின் முக்கிய நோக்கங்களாக, மேம்படுத்தப்பட்ட காரீப் நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல். மண் பரிசோதனை மற்றும் மண்வள அட்டை பயன்பாடு, சீரிய விவசாய தொழில்நுட்பங்கள் மற்றும் சமச்சீர் உர பயன்பாட்டின் மூலம் உற்பத்தியை பெருக்குதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல். மத்திய மற்றும் மாநில அரசின் முக்கிய திட்டங்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகும். விழிப்புணர்வு நிகழ்ச்சி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, 10 வட்டாரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் நடக்கிறது. இதில் விவசாயிகள் பங்கேற்கலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.