/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டி; தங்கம் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

ADDED : அக் 23, 2024 07:32 AM
கிருஷ்ணகிரி: -குந்தாரப்பள்ளி, ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளி சி.பி.எஸ்.சி., மாணவர்கள், டெல்லியில் நடந்த தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில், தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
டெல்லியில் நடந்த, தேசிய ஏர் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், கிருஷ்ணகிரி அருகில் உள்ள குந்தாரப்பள்ளி ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளி சி.பி.எஸ்.சி., எட்டாம் வகுப்பு மாணவன் சசிகாந்த் தங்கப்பதக்கமும், எட்டாம் வகுப்பு மாணவன் லட்சுமி சரண், ஆறாம் வகுப்பு மாணவி வைஷ்ணவி ஆகிய இருவரும் வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.
பதக்கம் வென்ற மாணவ, மாணவியரை பள்ளி நிறுவனர் டாக்டர் அன்பரசன், தாளாளர் சங்கீதா அன்பரசன் ஆகியோர் பாராட்டி கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். விழா ஏற்பாடுகளை பள்ளி மேலாளர் பூபேஷ் செய்திருந்தார். பள்ளி முதல்வர் ஷர்மிளா நன்றி கூறினார்.