/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வீட்டிலிருந்த மூதாட்டியை தாக்கி கொன்று நகையை கொள்ளையடித்த இருவருக்கு வலை
/
வீட்டிலிருந்த மூதாட்டியை தாக்கி கொன்று நகையை கொள்ளையடித்த இருவருக்கு வலை
வீட்டிலிருந்த மூதாட்டியை தாக்கி கொன்று நகையை கொள்ளையடித்த இருவருக்கு வலை
வீட்டிலிருந்த மூதாட்டியை தாக்கி கொன்று நகையை கொள்ளையடித்த இருவருக்கு வலை
ADDED : ஏப் 02, 2024 04:52 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகா அலுவலக சாலையில் வசிப்பவர் நஞ்சுண்டசெட்டி என்பவரின் மனைவி சரளாதேவி, 67; இவர், மகன் சுப்பிரமணி, 49, மருமகள் சுவாதி, 40, மற்றும் பிளஸ் 2 படிக்கும், 17 வயது பேரனுடன், வீட்டின், 2வது தளத்தில் வசிக்கிறார். சரளாதேவின், 3 மகள்களுக்கும் திருமணமாகி பெங்களூருவில் வசிக்கின்றனர்.
வீட்டின் முதல் தளத்திலுள்ள, 3 வீடுகளை வாடகைக்கு விட, சரளாதேவி ஏற்பாடு செய்திருந்தார். நேற்று மதியம், 12:15 மணிக்கு, மருமகள் சுவாதி வெளியே சென்றதால், வீட்டில் சரளாதேவி மட்டும் இருந்துள்ளார். அப்போது, வீட்டின் முதல்தளத்திலுள்ள வீட்டை பார்க்க, ஆண், பெண் என இருவர் வந்தனர். இந்நிலையில், மதியம், 1:10 மணிக்கு, சரளாதேவியின் மகள் ஒருவர், போனில் தொடர்பு கொண்டபோது சரளாதேவி போனை எடுக்காததால், ஆன்லைனில், 'சிசிடிவி' கேமராவை பதிவுகளை, பெங்களூருவில் இருந்து பார்த்துள்ளார். அப்போது, வீட்டில் மயங்கிய நிலையில் சரளாதேவி கிடந்துள்ளார். இது குறித்து சகோதரர் சுப்பிரமணியிடம் தெரிவித்துள்ளார். அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது தாய் இறந்து கிடந்ததுள்ளார்.
ஓசூர் டவுன் போலீசார் வீட்டிலிருந்த, 'சிசிடிவி' கேமராக்களை பார்வையிட்டனர். அப்போது, வீடு பார்க்க வந்த ஒரு ஆண், பெண் ஆகியோர், சரளாதேவி வாயில் துணியை திணித்து, அவரை தாக்கி கொன்று விட்டு, 5 பவுன் நகையை திருடி சென்றது தெரிந்தது. அவர்களை போலீசார் தேடி
வருகின்றனர்.

