/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் பேரவை கூட்டத்தில் வலியுறுத்தல்
/
புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் பேரவை கூட்டத்தில் வலியுறுத்தல்
புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் பேரவை கூட்டத்தில் வலியுறுத்தல்
புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் பேரவை கூட்டத்தில் வலியுறுத்தல்
ADDED : செப் 30, 2025 01:52 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், மாவட்ட சுகாதார பேரவை கூட்டம், மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமையில் நடந்தது.
அஞ்செட்டி, சூளகிரி, ராயக்கோட்டை மற்றும் காவேரிப்பட்டணம் மருத்துவமனைகளை தரம் உயர்த்தக்கோரியும், பெட்டமுகிளாலம், கொடக்கரை கிராமங்களில் புதிதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கோரியும், கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
அதேபோல, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நவீன சமையல் கூடம் மற்றும் கலவை மையம் அமைக்க கோரியும், போச்சம்பள்ளி மற்றும் மத்துார் அரசு மருத்துவமனைகளில் இரத்த சேகரிப்பு அலகில், மின் தடையில்லாமல் பணிபுரிய, ஜெனரேட்டர் வழங்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முதல்வர் சத்யபாமா, இணை இயக்குனர் (நலப்பணிகள்) ஞானமீனாட்சி, மாவட்ட சுகாதார அலுவலர் ரமேஷ் குமார், துணை இயக்குனர்கள், அனைத்து வட்டார மருத்துவ அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.