/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கொங்கு வேளாளர் கவுண்டர்கள் பேரவை செயற்குழு கூட்டம்
/
கொங்கு வேளாளர் கவுண்டர்கள் பேரவை செயற்குழு கூட்டம்
கொங்கு வேளாளர் கவுண்டர்கள் பேரவை செயற்குழு கூட்டம்
கொங்கு வேளாளர் கவுண்டர்கள் பேரவை செயற்குழு கூட்டம்
ADDED : செப் 30, 2025 01:53 AM
ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தனியார் திருமண மண்டபத்தில் கொங்கு வேளாளர் கவுண்டர்கள் பேரவையின் செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு, பேரவையின் பொதுச்செயலாளர் கோவிந்தசாமி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் அன்பழகன், மாவட்ட செயலாளர் ஆனந்த், மாநில துணைத்தலைவர் இன்பசேகரன், மேற்கு ஒன்றிய செயலாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வன்கொடுமை சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் நீக்கக்கோரியும், பி.சி.ஆர்., வன்கொடுமை சட்டத்தை முழுவதுமாக நீக்கக்கோரியும், வழக்குப்பதிவு செய்யப்பட்டு நிலுவையிலுள்ள அனைத்து வன்கொடுமை சட்ட வழக்குகளை, வாபஸ் பெற வேண்டும்.
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும். தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை தரம் உயர்த்த வேண்டும். கிருஷ்ணகிரி-திண்டிவனம் வரை உள்ள நான்கு வழிச் சாலையை திட்டமிட்டுள்ளபடி, 6 வழி சாலையாக அமைக்க, அரசு போர்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். கொங்கு மண்டலம் கோவை, திருப்பூர், கரூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், சேலம், திண்டுக்கல், ஈரோடு, திருச்சி, நீலகிரி ஆகிய மாவட்டங்களை கொண்டு, தனி மாநிலம் அமைக்க கோரி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.