/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.9.84 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகள் துவக்கம்
/
ரூ.9.84 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகள் துவக்கம்
ரூ.9.84 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகள் துவக்கம்
ரூ.9.84 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகள் துவக்கம்
ADDED : மார் 08, 2026 07:20 AM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நேற்று, 9.84 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டப்பணிகளைஉணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி அடுத்த பெரியமுத்துார் பஞ்., நெக்குந்தியில், 2.97 கோடி ரூபாய் மதிப்பில், 19 சாலை பணிகள், கட்டிகானப்பள்ளி பஞ்., துவக்கப்பள்ளியில்
சி.எஸ்.ஆர்., நிதியில், 1.70 கோடி ரூபாய் மதிப்பில், 10 வகுப்பறை கட்டட
பணிகள் மற்றும் கிருஷ்ணகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில்,
4.96 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டப் பணிகளை, உணவு வழங்கல் துறை
அமைச்சர் சக்கர-பாணி பூமி பூஜை
செய்து துவக்கி வைத்தார்.
மாவட்ட
கலெக்டர் தினேஷ்குமார், எம்.எல்.ஏ.,க்கள் மதிய-ழகன், பிரகாஷ் முன்னிலை
வகித்தனர். தொடர்ந்து, ராயக்-கோட்டை மேம்பால பகுதியில், 20 லட்சம்
மதிப்பில் பசுமை பூங்கா, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்
மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில், 188 பேருக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்
மற்றும் தையல் இயந்திரங்கள் உள்பட, 2.13 கோடி ரூபாய் மதிப்பிலான
நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் சூளகிரி, ஓசூர்
ஒன்றியத்தில் புதிய வழித்தடங்களில் பஸ்கள், புதிய பள்ளி வகுப்பறை
கட்டடங்கள் உள்ளிட்ட பல்-வேறு பணிகளை அமைச்சர் சக்கரபாணி துவக்கி
வைத்தார். ஓசூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மேயர் சத்யா
உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

