sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

செய்திகள் சில வரிகளில்...

/

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...


ADDED : ஜன 09, 2024 10:35 AM

Google News

ADDED : ஜன 09, 2024 10:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமர் கோவில் கும்பாபிஷேகம்

நரிக்குறவ மக்களுக்கு அழைப்பிதழ்

கிருஷ்ணகிரி அடுத்த சிக்காரிமேடு எனும் இடத் திலுள்ள நரிக்குறவர் சமுதாய மக்களை சந்தித்து, இந்து முன்னணியின் தென் பாரத அமைப்பாளர் பக்தன் ஜி, அ‍யோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ்களை, அந்த சமுதாயத்தின் தலைவர் ஜல்கேசன் மற்றும் ஊர் பொதுமக்களுக்கு வழங்கினார். அப்போது, இந்து முன்னணி கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் கலைகோபி, வருண்குமார், யுகேஸ்வரன், முரளிதரன், வேணுகோபால், சசிகுமார், நகர பொறுப்பாளர்கள் முத்து, சபரிநாதன், சம்பத், ஒன்றிய பொறுப்பாளர்கள் சந்தோஷ்குமார், முருகேசன், குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

சாலையோர வியாபாரிகளுக்கு

அடையாள அட்டை புதுப்பிப்பு

ஊத்தங்கரை பேரூராட்சி திருமண மண்டபத்தில், பேரூராட்சிக்கு உட்பட்ட சாலையோர வியாபாரிக ளுக்கு, பிரதான் மந்திரி ஆத்மநிர்பர் நிதி திட் டத்தில், ஏற்கனவே அடையாள அட்டைகள் வழங் கப்பட்டு உள்ளது. அதன் மூலம் தொழில் விருத்தி செய்ய தலா, 10,000 ரூபாய் பிணையில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்தும் விதமாக புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டு, ஆன்லைன் வாயிலாக கடன் தொகை செலுத்தும் வகையில், அடையாள அட்டை புதுப்பிக் கும் முகாம் நடந்தது. ஊத்தங்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியிலுள்ள, 153 சாலையோர வியாபார பயனாளிகள் கலந்து கொண்டு, தங்களது அடையாள அட்டையை புதுப்பித்துக் கொண்டனர்.

பர்கூரில் இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்மழை, வெள்ளம், புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை இயற்கை பேரிடர் பாதிப்பிற்கான பகுதிகளாக அறிவித்து, தமிழ்நாடு அரசு கோரியுள்ள, 21,000 கோடி ரூபாயை உடனடியாக வழங்கக்கோரி, பர்கூர் பஸ் ஸ்டாண்ட் அருகில், இ.கம்யூ., கட்சி சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட குழு உறுப்பினர் மோகன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் கண்ணு ‍பேசினார். வட்டத்தலைவர் மணி, வட்டக்குழு உறுப்பினர்கள் முனிசாமி, மாரியப்பன், ராஜேந்திரன், தர்மன், ராஜிவ், மஞ்சுளா, சுமதி உள்பட பலர் பங்கேற்றனர். இளைஞர் மன்ற வட்ட செயலாளர் சதீஷ் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில், நிவாரண நிதியாக தமிழக அரசு கேட்டுள்ள 21,000 கோடி ரூபாயை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கோஷங்களை எழுப்பினர்.

* தேன்கனிக்கோட்டை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, இ.கம்யூ., கட்சி சார்பில், விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் லகுமையா தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

* கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், இ.கம்யூ., கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சி.பி.ஐ., நகர செயலாளர் உபேத் தலைமை வகித்தார்.

பொதுமக்கள் குறைகளை கேட்டகிருஷ்ணகிரி காங்., - எம்.பி.,

பாகலுார் அருகே உள்ள பெலத்துார், சூடாபுரம், பாலிகானப்பள்ளி, தேவிரப்பள்ளி, அலசப்பள்ளி, முதுகானப்பள்ளி, பட்டவாரப்பள்ளி அக்ரஹாரம், சேவகானப்பள்ளி, சொக்கரசனப்பள்ளி ஆகிய கிரா மங்களில், காங்., - எம்.பி., செல்லக்குமார் சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கு மாறு, பொதுமக்கள் அவரிடம் மனுக்களை வழங்கி னர். அவற்றை பெற்றுக்கொண்ட அவர், நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். ஓசூர் வட்டார, காங்., தலைவர் எல்லப்பா, மாநகர தலைவர் தியாகராஜன், மாவட்ட துணைத்தலைவர் கீர்த்திகணேஷ், பொருளாளர் மாதேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

பல் மருத்துவ சங்கத்தின்ஓசூர் கிளை துவக்க விழா

இந்திய பல் மருத்துவ சங்க ஓசூர் கிளை துவக்க விழா, ஓசூரிலுள்ள இந்திய மருத்துவ சங்க அரங்கில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. தமிழ்நாடு கிளை செயலாளர் டாக்டர் செந்தாமரை கண்ணன் தலைமை வகித்தார். டாக்டர்கள் சண்முகவேல், சேதுமாதவன், பொன்ராஜ், இந்திய தலைமை பல் மருத்துவ சங்க நிர்வாகி கோகுல்ராஜ், மாநில துணை செயலாளர் கலைசெல்வன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர். தொடர்ந்து, பல் மருத்துவ சங்க ஓசூர் கிளை தலைவராக டாக்டர் அருணசடேசன், செயலாளராக கஜபதிராஜன், பொருளாளராக கவிதா யுவராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு பதவியேற்று கொண்டனர். மற்ற பதவிகளுக்கும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். ஏற்பாடுகளை, டாக்டர்கள் ஜோகேஷ், கிரி, அருண்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

மத்துாரில் மின்சாரம் துண்டிப்புகிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார், போச்சம்பள்ளி, பண்ணந்துார், பாரூர், கீழ்குப்பம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று அதிகாலை, 3:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை, சாரல் மழை பெய்தது. இதனால், மத்துார் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை, 5:00 மணி முதல், மதியம் 2:00 மணி வரை, 10 மணி நேரத்திற்கும் மேலாக மின் வினியோகம் தடைபட்டது. இதனால் அரசு, தனியார் அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

அரசு கல்லுாரிகளில்

காலிப்பணியிடம் நிரப்பக்கோரி கையெழுத்து இயக்கம்

அரசு கலைக் கல்லுாரிகளில் காலி பணியிடங்கள் நிரப்பக்கோரி, கிருஷ்ணகிரியில் நேற்று கையெழுத்து இயக்கம் நடந்தது.

கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் கழகம் (கிருஷ்ணகிரி கிளை) சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. கிளைத் தலைவர் மணிவேலு தலைமை வகித்தார். செயலாளர் சரவணன், துணைத்தலைவர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், தமிழகத்தில் உள்ள அரசு கலைக் கல்லுாரிகளில் காலியாக உள்ள பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்பிட வலியுறுத்தி நடந்த கையெழுத்து இயக்கத்தில், கல்லுாரி பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.

இதுகுறித்து நிர்வாகிகள் கூறுகையில், 'தமிழகம் முழுவதும், 170 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள, 4,000 பேராசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்து ஓராண்டாகியும், இதுவரை நிரப்பப்படவில்லை. இக்கோரிக்கை குறித்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது' என்றனர்.

கரும்பு கொள்முதல்

தோட்டத்தை பார்வையிட்ட அரசு அதிகாரிகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகைக்கு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்புடன் கரும்பும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு கரும்பு வழங்க கொள்முதல் செய்யப்படும் கரும்பு தோட்டங்களை, மாவட்ட கலெக்டர் சரயு மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

வேளாண் துறை இணை இயக்குனர் பச்சையப்பன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ஏகாம்பரம், கூட்டுறவு சார் பதிவாளர் சீனிவாசன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுந்தர்ராஜன், உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

தொழில் உரிமம் பெறாவிட்டால் 'சீல்': ஓசூர் மாநகர

நல அலுவலர் எச்சரிக்கைஓசூர் மாநகராட்சி மாநகர நகர் நல அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கை:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் கடைகள், வணிக வளாகங்கள், தொழில் நிறுவனங்கள் அனைத்தும், மாநகராட்சி தொழில் உரிமம் பெற்ற பின்பே செயல்பட வேண்டும் என, மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, தொழில் உரிமம் பெறாமல் இயங்கி வரும் கடைகள், வணிக நிறுவனங்களுக்கு ஏற்கனவே மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, தொடர்ந்து தொழில் உரிமம் பெறாமல் இயங்கி வரும் கடைகள், வணிக நிறுவனங்கள், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின்படி பூட்டி, 'சீல்' வைக்கப்படும். தொழில் உரிமம் பெற விண்ணப்பிப்பவர்களுக்கு உதவிடும் வகையில், மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவு அறையிலுள்ள உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு, விண்ணப்பதாரர்கள் பதிவேற்ற கட்டணமின்றி விண்ணப்பித்து கொள்ளலாம்.

இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

சமத்துவ பொங்கல் விழா

கிருஷ்ணகிரி மாவட்ட காதுகேளாதோர் சங்கம் மற்றும் அறக்கட்டளை சார்பில், ஓசூர் மத்திகிரி டைட்டான் டவுன்சிப் பகுதியிலுள்ள அலுவலகத்தில், சமத்துவ பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. பொங்கல் வைத்து, பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் 70க்கும் மேற்பட்ட காதுகேளாத உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகளை, கிருஷ்ணகிரி மாவட்ட காதுகேளாதோர் அறக்கட்டளை தலைவர் சுரேஷ்பாபு, தமிழ்நாடு காதுகேளாதோர் சங்க பொதுச்செயலாளர் மோகன் ஆகியோர் வழங்கினர். மாவட்ட காதுகேளாதோர் சங்க நிர்வாகிகள் பலராமன், ஜெயவேல், கோவர்தன், ஜெயசங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.

எருது விடும் விழா முன் அனுமதி

இணையத்தில் விண்ணப்பிக்கலாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், எருது விடும் விழாவிற்கு, அரசு முன் அனுமதி கோரும் விண்ணப்பங்களை, இணையதளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம் என, கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தமிழ்நாட்டின் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டை பாதுகாக்கும் வகையில் நடத்தப்பட்டு வரும் எருது விடும் விழா நிகழ்ச்சியை, அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றியும், முன் அனுமதி பெற்றும் விழா நடத்த வேண்டும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எருது விடும் விழா நடத்த, அரசின் முன் அனுமதி கோரும் விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன், www.jallikattu.tn.gov.in என்ற இணையதள முகப்பில் 1 மாதத்திற்கு முன்னதாகவே ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

மார்கழி மஹா உற்சவத்தையொட்டி

கவீஸ்வரர் கோவிலில் நாட்டிய நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி, பழையபேட்டை கிரிஜாம்பாள் உடனுறை கவீஸ்வரர் கோவிலில், மார்கழி மஹா உற்சவத்தையொட்டி, ஸ்வர ராக பரதாலயா சார்பில், நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. கவீஸ்வரர் கோவில் கமிட்டி செயலாளர் துக்காராம் தலைமை வகித்தார். கமிட்டி பொருளாளர் நடராஜன், நடன மாமணி அனுராதா ஆகியோர் குத்துவிளக்கேற்றி நாட்டிய நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். இதில், ஸ்வர ராக பரதாலயா சார்பில், கர்நாடக இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சியும், 'சொல்லித்தான் பாரேன் ஹரி நாமத்தை' என்ற கருப்பொருள் நாட்டியமும், ஆரணி பொற்சபை நாட்டியாலயா இயக்குனர் சூரியாவின் நடன நிகழ்ச்சியும், நர்தனன் குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சியும் நடந்தன. இதில், 50க்கும் மேற்பட்ட நாட்டியக் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

2 மாதங்களாக குழாய் உடைப்பு

கண்டுகொள்ளாத அதிகாரிகள்

கிருஷ்ணகிரியில், பெங்களூரு சாலையில் அமைந்துள்ள சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில், 60க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள, ஐ.வி.டி.பி., அலுவலகத்திற்கு செல்லும் இடதுபுற நுழைவு வாயிலில் கடந்த, 2 மாதங்களுக்கு முன்பு குழாய் உடைந்து குடிநீர் சாலையில் ஓடுகிறது. நீண்ட நாட்கள் சாலையில் குடிநீர் வீணாகி ஓடி வருவதால், அங்கு ஆறு போல் காட்சியளிக்கிறது.

இதனால், குடிநீர் வீணாகி வருவதோடு, தண்ணீர் ஓடி சாலை சேதம் அடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் தினமும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த வழியில் ஏராளமான அரசு அதிகாரிகள் சென்று வரும் நிலையில், குடிநீர் குழாய் உடைப்பை யாரும் கண்டு கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். எனவே, நகராட்சி நிர்வாகம் குழாய் உடைப்பை போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காய்கறி விற்பனை 'டல்'

அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், நேற்று அதிகாலை முதல் பெய்ய துவங்கிய மழை மாலையிலும் தொடர்ந்தது. இதனால், நேற்று அரூர் வாரச்சந்தைக்கு மக்கள் அதிகளவில் வரவில்லை. காய்கறிகள் விற்பனை பெருமளவு பாதிக்கப்பட்டதால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

சாரல் மழையால் மக்களின்

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தர்மபுரி, ஜன. 9-

தர்மபுரி மாவட்டத்தில், நேற்று காலை முதல் தர்மபுரி, நல்லம்பள்ளி, தொப்பூர், இண்டூர், பாலக்கோடு, மாரண்டஹள்ளி, காரிமங்கலம், அரூர், பாப்பிரெட்டிபட்டி, பொம்மிடி உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்ய தொடங்கியது. காலையில் தொடங்கிய சாரல் மழை, மாலை வரை நீடித்தது. இதில் அதிகபட்சமாக, பாப்பிரெட்டிப்பட்டியில், 6 மி.மீ., அளவிற்கு மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். தொடர் சாரல் மழை மற்றும் குளிரால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

ரூ.7.5 லட்சத்தில் நிழற்கூடம்மாரண்டஹள்ளி பைபாஸ் ரோடு, அம்பேத்கர் காலனி அருகே, லோக்சபா எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 7.50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து, நிழற்கூடம் அமைக்கும் பணியை தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., செந்தில்குமார் தொடங்கி வைத்தார். இதில், பேரூராட்சி தலைவர் வெங்கடேசன், செயல் அலுவலர் குமுதா, பேரூராட்சி துணைத்தலைவர் கார்த்திகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில்கம்யூ., நிர்வாகி பலி

மழை, வெள்ளம், புயலால் பாதித்த மாவட்டங்களை இயற்கை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கக்கோரி, பென்னாகரத்தில், இ.கம்யூ., கட்சியின் சார்பில், இந்தியன் வங்கி முன் ஆர்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினரும், பென்னாகரம் நகர செயலாளருமான விஜயபாரதி, 49, தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கும் போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பென்னாகரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்த நிலையில் உயிரிழந்தார். அவருக்கு காந்திமதி என்ற மனைவியும், 2 பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

ரூ.3 லட்சத்துக்கு பருத்தி ஏலம்தர்மபுரி மாவட்டம், அரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று இ-நாம் மூலம் பருத்தி ஏலம் நடந்தது. இதில், 26 விவசாயிகள், 40 குவிண்டால் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், ஆர்.சி.எச்., ரகம் குவிண்டால், 6,466 முதல், 7,266 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 40 குவிண்டால் பருத்தி, 3 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்தர்மபுரியில், இ.கம்யூ., கட்சி சார்பில், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் தேவராசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், மழை மற்றும் புயலால் பாதித்த சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, துாத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களை, இயற்கை பேரிடராக அறிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மாநில அரசு கேட்டுள்ள, 21,692 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். மேலும், உயிரிழப்பு மற்றும் அதிகம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவையான நிதி மற்றும் உதவிகளை செய்ய, மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இலவச வீட்டுமனை

பட்டா கேட்டு மனு

அரூர் அடுத்த எம்.வேட்ரப்பட்டி கிராம மக்கள், தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் கொடுத்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

அரூர் அடுத்த எம்.வேட்ரப்பட்டியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு கடந்த, 20, ஆண்டுகளுக்கு முன் ஆதி திராவிடர் கிராம நத்தத்தில் இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த இடத்தை தனிநபர் ஒருவர் தற்போது வரை ஆக்கிரமிப்பு செய்து வருகிறார். எனவே, இந்த இடத்தை மீட்டு, இலவச வீட்டுமனை பட்டா கேட்டு, பல ஆண்டுகளாக விண்ணப்பித்துள்ள பல கிராமங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு, இதை உடனடியாக வழங்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து, பலமுறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை இல்லை.

இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.

மா.திறனாளிகளுக்கு ரூ.5.73 லட்சம் விருப்ப நிதி

மாற்றுத்திறனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்ய, 5.73 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி, அடுக்குமாடி குடியிருப்புக்கான, ஆணையை கலெக்டர் சாந்தி வழங்கினார்.

தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டு, கலெக்டர் சாந்தி தெரிவித்ததாவது:

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த, 5 மாற்றுத்திறனாளிகள் அடுக்குமாடி குடியிருப்பில், வீடு ஒதுக்கீடு செய்ய செலுத்த வேண்டிய பங்களிப்பு தொகையை, மாவட்ட கலெக்டர் விருப்ப நிதியிலிருந்து நிதியுதவியாக அளிக்க கோரிக்கை மனு அளித்தனர். அதன் அடிப்படையில், 5 மாற்றுத்திறனாளிகளுக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீடு செய்ய, தேவையான பயனாளியின் பங்களிப்புத்தொகை, 5.73 லட்சம் ரூபாயை ஒதுக்கி, குடியிருப்புக்கான பணி ஆணை வழங்கப்பட்டது.

இவ்வாறு, அவர் கூறினார்.

ஸ்ரீ தங்கவேல் சில்க்ஸ், ரெடிமேட்ஸ் திறப்பு விழா

நல்லம்பள்ளியில், 3 தளத்தில், 'ஏசி' மயமாக்கப்பட்ட ஸ்ரீ தங்கவேல் சில்க்ஸ், ரெடிமேட்ஸ் ஜவுளிக்கடையை எம்.எல்.ஏ.,க்கள் திறந்து வைத்து, முதல் விற்பனை தொடங்கி வைத்தனர்.

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி பஸ் ஸ்டாண்ட் எதிரில், முழுவதும், 'ஏசி' மையமாக்கப்பட்ட ஸ்ரீதங்கவேல் புதிய ஜவுளிக்கடை திறப்பு விழா நேற்று நடந்தது. இதில், நிறுவன தலைவர்கள் தங்கவேல், மாதம்மாள் தங்கவேல் ஆகியோர் தலைமை வகித்தனர். நிர்வாக இயக்குனர்கள் பழனிசாமி, இன்பநாதன், ராவணன் மற்றும் மகேஸ்வரி பழனிசாமி, பிரபாவதி இன்பநாதன், தீபா ராவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் சேசம்பட்டி குப்பன் வரவேற்றார்.

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கே.பி.அன்பழகன், கோவிந்தசாமி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ., தடங்கம் சுப்ரமணி ஆகியோர், 'ஏசி' மையமாக்கப்பட்ட ஜவுளிக்கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில், நல்லம்பள்ளி சேர்மன் மகேஸ்வரி பெரியசாமி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் சண்முகம், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், முன்னாள், தி.மு.க., ஒன்றிய செயலாளர் துரைசாமி, அ.தி.மு.க., பிரமுகர் மணி, பஞ்., தலைவர் புவனேஸ்வரிமூர்த்தி, மாரியம்மாள் முனிராஜ், பிரேம் குமார் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். கடை மேலாளர் சரவணன் நன்றி கூறினார்.

சாலையில் கொட்டப்படும் கோழி கழிவு

தர்மபுரி, இலக்கியம்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட பெருமாள் கோவில் தெருவில், போதிய அளவில் குப்பை தொட்டிகள் இல்லை. இப்பகுதி மக்கள் வீட்டில் சேகரிக்கும் குப்பையை, சாலையோரம் கொட்டி விடுகின்றனர். இது, சாலை முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. மேலும், இலக்கியம்பட்டியில் கோழி இறைச்சி கடை நடத்தி வரும் சிலர், அதன் கழிவுகளை கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால் கழிவுகள் சாலை முழுவதும் பரவி கடும் துர்நாற்றம் வீசுகிறது. இந்த கெட்ட வாடையால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிபடுகின்றனர்.

இப்பிரச்னைக்கு பஞ்., நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ் வளர்ச்சி துறை சார்பில்

மாணவர்களுக்கான போட்டி

தமிழ் வளர்ச்சி துறை சார்பில், தர்மபுரி மாவட்ட பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள், 9 மற்றும் 10ம் தேதி ஆகிய இரு நாட்கள் நடக்கிறது.

இது குறித்து, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளதாவது:

தர்மபுரி மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், நடப்பாண்டில் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களிடையே தமிழில் பேச்சாற்றல், படைப்பாற்றலை வளர்க்கும் நோக்கில் மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் நடக்கவுள்ளது. இதில், 11, 12ம் வகுப்பில் படிக்கும் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் இன்றும், கல்லுாரி மாணவர்களுக்கான போட்டிகள் நாளையும், தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேனிலைப் பள்ளியில் நடக்கிறது.

கவிதை, கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக, 10,000, 2வது பரிசு, 7,000,- 3வது பரிசு, 5,000 என வழங்கப்படும். தர்மபுரி மாவட்டத்திலுள்ள அரசு, தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், 11, 12ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்கள், அரசு உதவி பெறும் கல்லுாரிகள், சுயநிதி கல்லுாரிகள், கலை கல்லுாரிகள், சட்டக் கல்லுாரிகள், மருத்துவ, கால்நடை மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் கல்வியியல் கல்லுாரிகள் ஆகியவற்றில் பயிலும் மாணவர்கள், இப்போட்டிகளில் பங்கேற்கலாம்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us