sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

செய்திகள் சில வரிகளில்...

/

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...


ADDED : ஜன 29, 2024 11:07 AM

Google News

ADDED : ஜன 29, 2024 11:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மளிகை கடையில்

ரூ.3௦ ஆயிரம் திருட்டு

நல்லம்பள்ளியை சேர்ந்தவர் ராஜாத்தி, 45; இவர், நல்லம்பள்ளி கடைவீதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று காலை, 7:00 மணிக்கு, கடையை திறந்து வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்தது.

பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது, கல்லாவில் இருந்த, 30,000 ரூபாய் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து,

அதியமான் கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நெடுஞ்சாலையில் குவிந்து கிடக்கும்

மண் குவியலால் விபத்து அபாயம்

பாலக்கோடு நெடுஞ்சாலை, சென்டர் மீடியன் பகுதி சாலைகளில் மண் குவியலால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு கடைவீதி நெடுஞ்சாலை, ஸ்துாபி மைதானம் முதல் பி.டி.ஓ., அலுவகம் வரை சென்டர் மீடியன் அமைக்கப்பட்டது. இந்த, சென்டர் மீடியன் ஓரங்களில், பல மாதங்களாக, மண் குவியல் சேர்ந்துள்ளது. இதில், கனரக வாகனங்கள் செல்லும்போது, சென்டர் மீடியன் ஓரமுள்ள மண், துாசுக்கள் எதிர் வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு, மண் புழுதி பறக்கிறது. இதனால், அடிக்கடி வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருவதால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால், எப்போதும் பரபரப்பாக உள்ள சாலையில், வாகன ஓட்டிகள், நடந்து செல்லும் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே, நெடுஞ்சாலை பகுதியிலுள்ள மண் குவியலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேகாலயாவில் பலியாகி விமானத்தில்

சொந்த ஊர் வந்த டிரைவரின் உடல்

அரூர் அடுத்த தாமரைகோழியம்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் மணிகண்டன், 29; இவர் மனைவி பிரியதர்ஷினி, 26; தம்பதிக்கு ஜெய்ஸ்ரீ, 4; மற்றும் ஒரு மாத பெண் குழந்தை உள்ளது. கடந்த, 24ல் மணிகண்டன் லாரியில் கண்ணாடி பாரம் ஏற்றிக் கொண்டு

மேகலாயாவில் உள்ள சில்லாங் சென்றபோது, விபத்தில் இறந்தார்.

மனைவி பிரியதர்ஷினி மற்றும் லாரி உரிமையாளர் ஆகியோர் மணிகண்டனின் உடலை மேகாலயாவிலிருந்து சொந்த ஊர் கொண்டு வர உதவி கேட்டு வீடியோ பதிவிட்டுள்ளனர். இதையறிந்த, கோவில்பட்டியை சேர்ந்த லாரி உரிமையாளர் கணேஷ்குமார், ஒரு நபர், 99 ரூபாய் கொடுத்தால் மணிகண்டனின் உடலை சொந்த ஊர் கொண்டுவர முடியும் என, 'வாட்ஸாப்' குழுக்களில் பதிவிட்டுள்ளார். அதன்படி பலரும், பணம் செலுத்தி உள்ளனர். இதையடுத்து மணிகண்டனின் உடல் மேகாலயாவிலிருந்து, 2 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து, விமானம் மூலமாக பெங்களூருக்கு கொண்டு வரப்பட்டது. பின், அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் நேற்று முன்தினம் மாலை சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

மண் கடத்தல்

லாரி பறிமுதல்

தர்மபுரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை மேல் நிலை ஆர்.ஐ., அருணகிரி நேற்று பாப்பிரெட்டிபட்டி -தர்மபுரி ரோட்டில், பொம்மிடி அடுத்த துரிஞ்சிப்பட்டியில், வாகன தணிக்கையில் ஈடுபட்டார்.

அப்போது அதிவேகமாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி, சோதனை செய்தனர். அப்போது, லாரி டிரைவர் தப்பி ஓடினார். லாரியில், 2 யூனிட் கிராவல் மண் அரசு அனுமதி இன்றி கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து, பொம்மிடி போலீசில் அருணகிரி புகார் செய்தார்.

அதன்படி பொம்மிடி போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு

அபராதம் விதிக்க பொதுமக்கள் கோரிக்கை

அரூரில், நான்கு ரோடு, திரு.வி.க., நகர், கச்சேரிமேடு ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்கள் முன், நான்கு வழிச்சாலையின் இருபுறமும் நான்கு மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், நடந்து செல்லும் பொதுமக்கள் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர்.

எனவே, போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதுடன், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில், போலீசார் ஈடுபட வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொழிலாளர்களுக்கு

ஊக்கத்தொகை வழங்கல்

அரூர் அடுத்த கோபாலபுரம் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு, கரும்பு வெட்டும் தொழிலாளர்களின் பணியை கவுரவிப்பதுடன், அவர்களை ஊக்குவிக்கும் வகையில், ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில், ஆலையில் பதிவு செய்து, கரும்பு வெட்டும் கூலியை ஆலை மூலமாக பெற்ற, 70 பேருக்கு, ஆலை மேலாண்மை இயக்குனர் பிரியா, 4.84 லட்சம் ரூபாயை ஊக்கத்தொகையாக வழங்கினார். ஆலையின், 32 ஆண்டு கால அரவை பருவத்தில் முதல்முறையாக தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட, பலர் கலந்து கொண்டனர்.

இந்தியன் மெட்ரிக் பள்ளியில்

ஆண்டு விளையாட்டு விழா

தர்மபுரி மாவட்டம், அரூரில், சேலம் சாலை, கோபி நாதம்பட்டி கூட்ரோடியிலுள்ள இந்தியன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், ஆண்டு விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது.

ஊத்தங்கரை வித்யாமந்திர் கல்வி நிறுவன நிறுவனர் சந்திரசேகர், கோபிநாதம்பட்டி இன்ஸ்பெக்டர் கமலநாதன் ஆகியோர் விழாவை தொடங்கி வைத்தனர். விழாவில், இந்தியன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் பழனிவேல், மெட்ரிக் பள்ளி முதல்வர் மணிகண்டன், துணை முதல்வர் சிலம்பரசன், சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர் ஸ்ரீலதா ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பள்ளி தாளாளர் பழனிவேல், செயலாளர் தமிழ்முருகன் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.

சிவசுப்ரமணிய சுவாமி கோவில் தேரோட்டம்

இண்டூர், வள்ளி-தெய்வானை சமேத சிவசுப்ரமணிய சுவாமி கோவில், தேரோட்ட விழாவில், திராளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி மாவட்டம், இண்டூரில் வள்ளி தெய்வானை சமேத சிவசுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு, தைப்பூசம் திருவிழாவையொட்டி, கடந்த, 21ம் தேதியன்று கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து, சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி மற்றும் சிறப்பு அபிஷேக, அலங்கார சேவை நடந்தது. கடந்த, 25- அன்று சுவாமி திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சியும், 26- ல் விநாயகர் தேர் இழுத்தல் நிகழ்ச்சி நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்வாக, நேற்று முன்தினம் அலங்கரிக்கப்பட்ட, வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்ரமணிய சுவாமி உற்சவர், தைப்பூச மஹாரத தேர் இழுக்கும் நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, 'அரோகரா' கோஷத்துடன் தேரோட்டம் நடந்தது. ஏற்பாடுகளை, விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலிபாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, பி.துரிஞ்சிப்பட்டியை சேர்ந்தவர் பிரகாஷ், 30, கட்டட தொழிலாளி; கிருஷ்ணகிரி மாவட்டம், கலுகொண்டப்பள்ளி கிராமத்தில் தங்கி பணியாற்றி வந்தார்; கடந்த, 22 காலை, 10:30 மணிக்கு, குருபட்டி அருகே உள்ள வி.எஸ்., கோல்டன் சிட்டி லே அவுட்டில் இருந்த ஸ்டீபன் என்பவரது வீட்டு சுவற்றை பிரகாஷ் இடித்தார்.

அப்போது சுவர் இடிந்து பிரகாஷ் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவர், ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் உயிரிழந்தார். மத்திகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.

பா.ஜ.,வில் 50 பேர் ஐக்கியம்

ஓசூரிலுள்ள கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, பா.ஜ., கட்சி அலுவலகத்தில், மாற்று கட்சியில் இருந்து விலகிய, 50க்கும் மேற்பட்டோர், ராஜா என்பவரது தலைமையில், பா.ஜ., கட்சியில் தங்களை நேற்று இணைத்து கொண்டனர்.

மாவட்ட பொருளாளர் சீனிவாசன், துணைத்தலைவர் முருகன், செயலாளர்கள் பிரவீன்குமார், ராஜசேகர், மண்டல தலைவர் ரமேஷ், இளைஞரணி மாநில செயலாளர் கிஷோர், மாவட்ட தலைவர் வீரேந்திரா உட்பட பலர் பங்கேற்றனர்.

இலவச கண் பரிசோதனை முகாம்

கிருஷ்ணகிரி சத்ய சாய் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் மற்றும் எஸ்.வி.என்., மருத்துவமனை இணைந்து நேற்று இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தின. முகாமை பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, கண் பரிசோதனை செய்து கொண்டார்.

இதில், பார்வை குறைபாடுகள், கண்புரை பரிசோதனை, சர்க்கரை கண் நோய், கண் நீர் அழுத்தம், முதியோர் கண் குறை

பாடுகள், குழந்தைகள் கண் குறைபாடுகள் குறித்து பரிசோதிக்கப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டன. மேலும் கண் பார்வை குறைபாடுகள் உள்ளவர்களுக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டன.

பஞ்., தலைவர் காயத்திரி தேவி கோவிந்தராஜ், துணைத்தலைவர் செல்வி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சத்யசாய் நகர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

ஓசூரில் இலவச மருத்துவ முகாம்

ஓசூர் மாநகராட்சி, 22வது வார்டுக்கு உட்பட்ட முனீஸ்வர் நகர், 7வது குறுக்கு தெருவில், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் முனீஸ்வர் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் ஆகியவை சார்பில், இலவச மருத்துவ முகாம் நேற்று நடந்தது.

மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன் தலைமை வகித்து, முகாமை துவக்கி வைத்தார். டாக்டர் பிரியதர்ஷினி தலைமையிலான மருத்துவக் குழுவினர், இருதய பிரச்னைகள், மூட்டு தேய்மானம், தைராய்டு கட்டிகள், கர்ப்பப்பை கட்டிகள், குழந்தையின்மைக்கான ஆலோசனைகள் மற்றும் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு ஆகிய பரிசோதனை செய்தனர்.

நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் முகாமில் பங்கேற்று பரிசோதனை செய்து கொண்டனர். மேலும், 45 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு இ.சி.ஜி., பரிசோதனை

இலவசமாக மேற்கொள்ளப்பட்டது. முனீஸ்வர் நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் பிரகாஷ், நிர்வாகிகள் மணிகண்டன், சித்ரா, யசோதாராணி, சின்னபையன், தமிழ்வாணன்

உட்பட பலர் பங்கேற்றனர்.

மாநில ஐவர் கால்பந்து போட்டி

கிருஷ்ணகிரி கால்பந்து குழு சார்பில், மாவட்ட விளையாட்டு அரங்கில், மாநில அளவில் முதலாம் ஆண்டு ஐவர் கால்பந்து போட்டி நேற்று நாக்அவுட் முறையில் நடந்தது.

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்குமார் இப்போட்டிகளை துவக்கி வைத்து, வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இப்போட்டிகளில், சென்னை, கும்பகோணம், மதுரை, கிருஷ்ணகிரி மற்றும் பெ

ங்களூரு ஆகிய பகுதிகளில் இருந்து, 8 அணிகள் என மொத்தம், 300 பேர் கலந்து கொண்டனர்.

இவர்களுக்கு இரண்டு மைதானங்களில், நாக் அவுட் முறையில், போட்டிகள் நடத்தப்பட்டு, 4 அணிகள் அரையிறுதிக்கும், 2 அணிகள் இறுதி போட்டியிலும் விளையாடின. இதில் முதல் இடத்தில் வெற்றி பெற்ற அணிக்கு, 15,000 ரூபாயும், 2ம் அணிக்கு, 10,000 ரூபாயும், 3ம் அணிக்கு, 7,000 ரூபாயும், 4ம் அணிக்கு, 5,000 ரூபாயும் மற்றும் கோப்பைகளும் வழங்கப்பட்டன. கால்பந்து குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

கிணற்றில் நீச்சல் கற்றபோது

நீரில் மூழ்கி மாணவர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் சண்முக செட்டித்தெரு‍வை சேர்ந்தவர் பிரித்திவிராஜ், 18; தனியார் கல்லுாரியில் முதலாமாண்டு படித்து வந்தார். நேற்று விடுமுறை என்பதால், நண்பர்களுடன் மிட்டள்ளிபுதுாரில் உள்ள பிரபாகரன் என்பவரது, 60 அடி ஆழ விவசாய கிணற்றில் நீச்சல் கற்க சென்றுள்ளார்.

கிணற்றில், 40 அடிக்கு நீர் இருந்தது. நீச்சல் கற்றுக் கொண்டிருந்த போது பிரித்திவிராஜ் நீரில் மூழ்கினார். கிருஷ்ணகிரி தீயணைப்பு துறையினர் தீயணைப்பாளர் சர்குணன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் மூழ்கிய பிரித்திவிராஜை தேடினர். தொடர்ந்து, 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மாணவர் பிரித்திவிராஜின் சடலத்தை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அறிஞர் அண்ணா கலைக் கல்லுாரியில்

15வது பட்டமளிப்பு விழா

கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 15வது பட்டமளிப்பு விழா நடந்தது. முன்னாள் துணை சபாநாயகரும், கல்லுாரி தலைவருமான டாக்டர் தம்பிதுரை தலைமை வகித்து பேசுகையில், ''வாய்ப்புகளை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற்றம் காண வேண்டும். பட்டங்கள் பெற்றால் மட்டும் போதாது. பெற்றோர்களிடம் மாணவர்கள் நன்றி உணர்வுடன், மதித்து வாழ வேண்டும். நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டங்களை படிப்பதன் மூலம், பல்வேறு போட்டி தேர்வுகளில் வெற்றி பெற முடியும்,'' என்றார்.

திருவாரூர் மத்திய பல்கலைக் கழகம் துணைவேந்தர் டாக்டர் கிருஷ்ணன் மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார். இதில், இளங்கலை பட்டப்பிரிவில், 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், முதுகலை பட்டப் பிரிவில், 500க்கும் மேற்பட்டவர்கள், ஆய்வியல் நிறைஞர் பட்டப் பிரிவில், 100க்கும் மேற்பட்டவர்களும் பட்டங்களை பெற்றனர்.

விழாவில், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன், வேளாங்கண்ணி பள்ளிக் கல்வி குழுமம் மற்றும் அறிஞர் அண்ணா கல்லுாரியின் தாளாளர் கூத்தரசன், அறிஞர் அண்ணா கல்லுாரி செயலாளர் சுரேஷ் உள்பட பலர் பங்கேற்றனர். கல்லுாரி முதல்வர் தனபால் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us