sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

செய்திகள் சில வரிகளில்...

/

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...


ADDED : பிப் 07, 2024 11:54 AM

Google News

ADDED : பிப் 07, 2024 11:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கல்லாவி

அரசு பள்ளி ஆண்டு விழா

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, கல்லாவி அரசு மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர் முனைவர் பற்குணன் வரவேற்றார். கல்லாவி பஞ்., தலைவர் ராமன் தலைமை வகித்தார், பி.டி.ஏ., தலைவர் நடராஜ், எஸ்.எம்.சி., தலைவி பரிமளா ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்தனர். ஒன்றிய கவுன்சிலர் சாந்திகுணசேகரன், பள்ளி மாணவ, மாணவியர், பெற்றோர், கல்லாவி சமூக சேவை குழு, கல்லாவி அதியமான் ரூரல் டெவலப்மென்ட், ஆசிரியர், ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள், பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. உதவி தலைமை ஆசிரியர் வெங்கடாசலபதி நன்றி கூறினார்.

ஓசூர் மாநகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு காலணி

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில், 176 நிரந்தர துாய்மை பணியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கும், குடிநீர் வினியோகம் செய்யும் ஊழியர்களுக்கும் என மொத்தம், 193 பேருக்கு, பொது சுகாதாரத்துறை சார்பில், 52,000 ரூபாய் மதிப்பில், சோப்பு மற்றும் காலணி வழங்கும் நிகழ்ச்சி, மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.

மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன் ஆகியோர், துாய்மை பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு காலணி மற்றும் சோப்பை வழங்கினர். மேலும், மாநகராட்சி வாகன டிரைவர்கள், 9 பேருக்கு ஷூக்கள் வழங்கப்

பட்டன.

மாநகர நல அலுவலர் பிரபாகரன், மண்டல தலைவர் ரவி, கல்விக்குழு தலைவர் ஸ்ரீதரன், கவுன்சிலர்கள் நாகராஜ், மோசின்தாஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

தனியார் கல்குவாரியை மூட

தாசில்தாரிடம் மக்கள் மனு

தேன்கனிக்கோட்டை தாசில்தார் பரிமேலழகரிடம், முழுவனப்பள்ளி கிராம மக்கள் மற்றும் மா.கம்யூ., கட்சியினர் நேற்று அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

முழுவனப்பள்ளி கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகிறோம். எங்கள் கிராமம் அருகே தனியார் கல்குவாரி கடந்த ஜன., மாதம் செயல்படுகிறது.

இந்த கல்குவாரி முழுவனப்பள்ளி கிராமத்தில் இருந்து, 180 மீட்டர் துாரத்தில் உள்ளது. இங்கு வெடிகள் வைக்கும் போது வீடுகள் விரிசல் விட்டு சேதமாகி வருகிறது. பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. கல்குவாரியால், இப்பகுதி ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம்

பாதிக்கப்படும்.

கல்குவாரியில் இருந்து, 90 டன் எடையுள்ள கிரானைட் கற்களை ஏற்றி செல்வதால், இப்

பகுதி சாலைகள் சேதமாகி வருகின்றன. இதனால், பள்ளி வாகனங்கள் மற்றும் விவசாயிகளின் விளை பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் செல்வதில் சிரமம் உள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் நலனை கருத்தில் கொண்டு, கல்குவாரியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.

அரசின் விலையில்லா

சைக்கிள் வழங்கும் விழா

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த மாசிநாயக்கனப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில், அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.

ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், 27 மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். ஒன்றிய கவுன்சிலர் சம்பத்குமார், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முத்தப்பா உட்பட பலர்

பங்கேற்றனர்.

கி.கிரியில் மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்: தி.மு.க.,வினர் பங்கேற்க அழைப்பு

கிருஷ்ணகிரியில் மா.கம்யூ., சார்பில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க.,வினர் கலந்து கொள்ள, கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மாநில உரிமைகளை காத்திடும் வகையில் மத்திய, பா.ஜ., அரசு, கவர்னர்கள் உள்ளிட்டோரை கண்டித்து, நாளை, மா.கம்யூ., சார்பில் கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. மா.கம்யூ., குழு உறுப்பினர் டில்லிபாபு தலைமையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில், மாவட்டத்திலுள்ள, தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன குரல் எழுப்ப வேண்டும்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

சாராயம், போதை பொருளின் தீமை

மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

கிருஷ்ணகிரியில் சாராயம் மற்றும் போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த

விழிப்புணர்வு பேரணி நடந்தது.

கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில், சாராயம் மற்றும் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. டி.ஆர்.ஓ., சாதனைக்குறள் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்டில் தொடங்கிய பேரணி, லண்டன்பேட்டை வழியாக பழையபேட்டை பஸ் ஸ்டாண்டில் நிறைவு பெற்றது. கல்லுாரி மற்றும் அரசு பள்ளி மாணவ, மாணவியர், போதைப்பொருள் தடுப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த துண்டு பிரசுரங்களும் வினியோகித்தனர்.

உதவி ஆணையர் (ஆயம்) குமரன், டி.எஸ்.பி., சிவலிங்கம், கோட்ட ஆய அலுவலர்கள், அரசு துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள், தன்னார்வலர்கள் உள்பட, 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கட்டிகானப்பள்ளி அரசு பள்ளியில்

உலக ஈர நிலம் தினம் கடைபிடிப்பு

கிருஷ்ணகிரி ஒன்றியம், கட்டிகானப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில், உலக ஈர நிலம் தினம் கடைபிடிக்கப்பட்டது.

இதையொட்டி, பள்ளியின் தேசிய பசுமைப்படை சார்பில், மாணவ, மாணவியருக்கு,

'புவி வெப்பமாவதை தடுக்கும் வழிமுறைகள்' என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியும், 'சுற்றுச் சூழல் பாதுகாப்பில்

மாணவர்களின் பங்கு' என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும், 'புவியை பாதுகாக்கும் வழிமுறைகள்' என்ற தலைப்பில் ஓவியப் போட்டியும்

நடத்தப்பட்டன.

ஒவ்வொரு போட்டியிலும் முதல், 3 இடங்களில் வெற்றி பெற்ற, 9 மாணவ, மாணவியருக்கும், ஒருவருக்கு ஆறுதல் பரிசும் என மொத்தம், 10 பேருக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் திம்மராஜ், பரிசு வழங்கி பாராட்டினார். இதற்கான ஏற்பாடுகளை, தேசிய பசுமைப்படை அமைப்பாளர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி செய்திருந்தார். ஆசிரியை அம்சவேணி நன்றி கூறினார்.

தேன்கனிக்கோட்டை அருகே யானைகள்

கர்நாடகாவிற்கு விரட்டும் பணி தீவிரம்

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரக பகுதியில், ஏராளமான யானைகள் முகாமிட்டுள்ளன.

இரவில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள், விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. நேற்று முன்தினம் தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில் இருந்து வெளியேறிய, 20க்கும் மேற்பட்ட யானைகள், தாவரக்கரை, மலசோனை, ஸ்யம் நகர், எஸ்டேட் ஆகிய பகுதிகளில் சுற்றித்திரிந்தன. அப்பகுதியில் சாகுபடி செய்திருந்த பயிர்களை சேதப்படுத்தின. இதனால் அப்பகுதி விவசாயிகள் கடும் கவலையடைந்தனர்.

தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானைகள் கூட்டத்தை வனப்

பகுதிக்கு விரட்டினர். கர்நாடகா மாநிலத்திற்கு யானைகளை விரட்டும் பணி, தொடர்ந்து நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us