sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

செய்திகள் சில வரிகளில்...

/

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...


ADDED : பிப் 09, 2024 11:14 AM

Google News

ADDED : பிப் 09, 2024 11:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரசு பள்ளியில்

தீ தடுப்பு ஒத்திகை

பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், இளம் செஞ்சிலுவை சங்க சிறப்பு முகாம் தலைமை ஆசிரியர் அப்துல்அஜிஸ் தலைமையில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் சிவமணி வரவேற்றார்.

அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கற்பகம் பேசினார். முகாமில் பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறையினர் மாணவர்களுக்கு தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தி காட்டினர். பேரிடர் காலங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.

பாலக்கோட்டில்

கள் விற்பனை ஜோர்

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த மாரண்டஹள்ளி, நல்லாம்பட்டி, ஆத்துமேடு, அத்திமுட்லு, வேளாங்காடு, எம்.ஜி.ஆர்., நகர், ராசிக்குட்டை, சாத்தன்கொட்டாய், கொலசனஹள்ளி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பனை மரங்களில் கள் இறக்கி, சிலர் விற்பனை செய்கின்றனர். சட்டவிரோதமாக கள் விற்பனை செய்வது இப்பகுதிகளில் நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

ரேஷன் கடை திறப்பு விழா:

அ.தி.மு.க., கொடிகளை

அகற்றியதால் பரபரப்பு

தர்மபுரி மாவட்டம், அரூர் டவுன் பஞ்.,க்கு உட்பட்ட நாசன்கொட்டாயில், நேற்று மதியம், 3:30 மணிக்கு பகுதி நேர ரேஷன் கடையை திறப்பதற்கு, அரூர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார் வந்தார். அவரை வரவேற்று, அ.தி.மு.க., கொடிகள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அப்போது அங்கு வந்த, தி.மு.க.,வினர் ஆளுங்கட்சியாக நாங்கள் இருக்கும் நிலையில், அ.தி.மு.க., கொடிகள் கட்டக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அவற்றை அகற்ற அதிகாரிகளிடம் வலியுறுத்தினர். இதையடுத்து, அ.தி.மு.க., கொடி மற்றும் பேனர்கள் அகற்றப்பட்டன.

இதனால், கோபமடைந்த எம்.எல்.ஏ., சம்பத்குமார், கடை திறப்பு விழாவை புறக்கணிப்பதாக கூறிச்சென்றார். தொடர்ந்து, அவரை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் சமாதானம் செய்ததை அடுத்து, 4:00 மணிக்கு கடையை திறந்தார். நிகழ்ச்சியில், தாசில்தார் கனிமொழி உள்பட, பலர் கலந்து கொண்டனர்.

இன்ஸ்பெக்டர்

பொறுப்பேற்பு

பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த லதா, கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக, சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி இன்ஸ்பெக்டர் அம்சவள்ளி நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பாப்பிரெட்டிப்பட்டி இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு போலீசார், பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

மாரியம்மன் கோவிலில் பந்தக்கால் நடும் விழா

பாலக்கோடு, புதுார் பொன்மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, நேற்று

பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டிலுள்ள புதுார் பொன்மாரியம்மன் கோவில் திருவிழா, ஆண்டுதோறும் மாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு வெகுவிமர்சியாக நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு வரும், 19ல் துவங்கி, 23 வரை இக்கோவில் திருவிழா நடக்கிறது.

இதையொட்டி, நேற்று திரவுபதியம்மன் கோயில் வளாகத்தில் பாரம்பரிய முறைப்படி பூஜை செய்து பந்தக்கால் நட்டு கொடியேற்றி விழா துவக்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில், 12 கிராம ஊர்கவுண்டர்கள், மந்திரி கவுண்டர்கள், தர்மகர்த்தா, ஊர் முக்கிய பிரமுகர்கள், புதுார் பொன்மாரியம்மன் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள் மற்றும் ஊர்மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

சுய உதவிகுழுக்களுக்கு ரூ.32.79 லட்சம் கடன் வழங்கல்

தர்மபுரி மாவட்டத்தில், மகளிர் சுய உதவி குழுவினருக்கு, 32.79 லட்சம் ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டது.

தர்மபுரி அரசு கலைக் கல்லுாரியில், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கிக்கடன் வழங்கும் நிகழ்ச்சி, கலெக்டர் சாந்தி தலைமையில் நடந்தது. இதில், மாவட்ட ஊரக பகுதியை சேர்ந்த, 178 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, 20.88 கோடி ரூபாய் அளவிற்கு வங்கிக்கடன் வழங்கப்பட்டது. இதேபோல், நகர்புற பகுதி, 112 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, 11.60 கோடி ரூபாயும், தனிநபர் தொழில் முனைவோருக்கு, 21.60 லட்சம் ரூபாய் வங்கிக்கடனும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள் பென்னாகரம், ஜி.கே.மணி, தர்மபுரி வெங்கடேஸ்வரன், பாப்பிரெட்டிப்பட்டி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, மாவட்ட முன்னோடி வங்கி கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

பெண்ணிடம் ஆசை காட்டி

ரூ.9.88 லட்சம் மோசடி

தேன்கனிக்கோட்டையை சேர்ந்தவர் கீதா, 26, தனியார் நிறுவன ஊழியர்; இவரது மொபைல்போனுக்கு ஒரு 'மெசேஜ்' வந்தது. அதில் பகுதி நேர வேலை செய்தால் ஊதியம், முதலீட்டிற்கு அதிக லாபம் கிடைக்கும் என இருந்தது. அதில் குறிப்பிட்டிருந்த லிங்க்கை, கீதா தொடர்பு கொண்டார். பின், அவர்கள் கூறிய வங்கி கணக்குகளில், 9.88 லட்சம் ரூபாயை அனுப்பினார். அதன் பின் இணையதள கணக்கு முடங்கியது. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கீதா, கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார்.

பத்திரப்பதிவு நடைமுறை

தொடர்பான முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை மற்றும் கெலமங்கலம் பத்திரப்பதிவு அலுவலக வளாகத்தில், கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, பத்திரப்பதிவு துறை சார்பில் பத்திரப்பதிவு நடைமுறைகள் தொடர்பான முகாம் நடந்தது. தேன்கனிக்கோட்டை சார் பதிவாளர் சாய்கீதா தலைமை வகித்தார். இதில் கிருஷ்ணகிரி, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ், எம்.எல்.ஏ., தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பேசினர். தொடர்ந்து அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

மாவட்ட பத்திரப்பதிவு அலுவலர் சங்கர், தேன்கனிக்கோட்டை டவுன் பஞ்.,தலைவர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஓசூருக்கு கனிமொழி வருகை

மாவட்ட செயலாளர் அறிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூருக்கு இன்று, தி.மு.க., - எம்.பி., கனிமொழி வருகை தரவுள்ளார்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை: வரவுள்ள லோக்சபா தேர்தலில் கிருஷ்ணகிரி, தர்மபுரி தொகுதிக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் கருத்து கேட்பு கூட்டம் இன்று மாலை ஓசூர், தளி சாலையில் உள்ள ஆனந்த் கிராண்ட் பேலஸில் நடக்கிறது. தி.மு.க., துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., தலைமை வகித்து கருத்துக்களை கேட்கிறார். அவருடன் அமைச்சர்கள், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரும் வருகின்றனர். மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் அனைவரும் தங்கள் கோரிக்கைகளை மனுவாக தயாரித்து அளிக்கலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

அரசு மகளிர் பள்ளி ஆண்டு விழா

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் முன்னதாக, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோபால், பள்ளி மேலாண்மை குழு தலைவி சரசு ஆகியோர் தலைமையில் தலைமை ஆசிரியை ஜெயந்தி சம்பத்து குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பட்டதாரி உதவி தலைமை ஆசிரியர் பிரபு வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் சிறப்பாக பணியாற்றிய அனைத்து ஆசிரியர்களுக்கும் பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டது.

'சிசிடிவி' வாஷிங் மெஷின் திருட்டு

வேப்பனஹள்ளி அடுத்த பெரிய பொம்மரசனப்பள்ளியை சேர்ந்தவர் திம்மக்கா, 60; இவர், வீட்டை பூட்டி விட்டு, கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் ஒசஅள்ளிக்கு சென்றார். நேற்று முன்தினம் மீண்டும் அவர் வீடு திரும்பியபோது, வீட்டில் பொருத்தப்பட்டிருந்த, 7 'சிசிடிவி' கேமராக்கள், 'வாஷிங் மெஷின்' உட்பட, 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடு போனது தெரிந்தது. திம்மக்கா புகார்படி, வேப்பனஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

என்.எஸ்.எஸ்.,

முகாம் நிறைவு

ஊத்தங்கரை அடுத்த, ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், ஆண்டு விழா மற்றும் அரசு பல்தொழிற்நுட்ப கல்லுாரி நாட்டு நலத்திட்ட முகாம் நிறைவு விழா நேற்று நடந்தது.

ஊத்தங்கரை வட்டார கல்வி அலுவலர் லோகேஷ் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் வரவேற்றார். விழாவில், ஊத்தங்கரை அரசு பல்தொழிற்நுட்ப கல்லுாரி முதல்வர் விஜயன், வட்டார கல்வி அலுவலர்கள் மாதம்மாள், ராஜேந்திரன், கெங்கப்பிராம்பட்டி பஞ்., தலைவர் வெங்கடேசன் ஆகியோர் பேசினர். மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடந்தது. விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

அஞ்செட்டி அருகே லேசான நில அதிர்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று மதியம் லேசான நிலஅதிர்வு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி தாலுகா, மாடக்கல் அருகிலுள்ள வனப்பகுதியில் நேற்று மதியம், 12:53 மணியளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் சரயு கூறுகையில், “கிருஷ்ணகிரி

மாவட்டத்தின் அஞ்செட்டி அருகிலுள்ள வனப்பகுதியில், லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவில், 2.9 ஆக பதிவாகியுள்ளதாகவும், 5 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் பேரிடர் மேலாண் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அப்பகுதிக்கு அதிகாரிகள் சென்றுள்ளனர்.

லேசான நில அதிர்வு என்பதாலும், வனப்பகுதி என்பதாலும், நில அதிர்வை யாரும் உணர முடியவில்லை. இது குறித்து, பொதுமக்கள் பயப்பட தேவையில்லை,” என்றார்.

கருங்கல் கடத்திய

லாரி பறிமுதல்

தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த ராமாபுரத்தை சேர்ந்தவர் மன்முன். இவரது நிலத்தில், நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு கருங்கற்களை கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, மொரப்பூர் எஸ்.ஐ., ரமேஷ் மற்றும் போலீசார் அங்கு சென்றனர். அப்போது, டாரஸ் லாரியில் கருங்கற்கள் ஏற்றிக் கொண்டிருந்த, 3 பேர் போலீசாரை கண்டவுடன் தப்பியோடினர். இதையடுத்து, டாரஸ் லாரி, ஹிட்டாச்சி, 2 மொபைல்போன், 2 பைக் மற்றும், 15 டன் கருங்கற்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடியவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

மத்துாரில் கவிழ்ந்த டாரஸ் லாரி

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் பஸ் ஸ்டாண்டில் நேற்று அதிகாலை, 3:00 மணியளவில் பெங்களூருவிலிருந்து பண்ருட்டிக்கு காய்கறிகளை ஏற்றி வந்த டாரஸ் லாரி, கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. லாரியை பண்ருட்டியை சேர்ந்த டிரைவர் சேது, 40, என்பவர் ஓட்டி வந்தார். இரவு நேரம் என்பதால் பஸ் ஸ்டாண்டில் பயணிகள், பொதுமக்கள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. மத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us