/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பட்டாளம்மன் கோவில் கும்பாபிேஷகம்
/
பட்டாளம்மன் கோவில் கும்பாபிேஷகம்
ADDED : ஆக 12, 2022 10:36 AM
கிருஷ்ணகிரியில், 62 ஆண்டுகளுக்கு பிறகு பட்டாளம்மன் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது.
கிருஷ்ணகிரி பழையபேட்டை டி.பி., சாலையில் உள்ள பட்டாளம்மன் கோவில் கும்பாபிேஷகம் கடந்த, 1959ல் நடந்தது. 62 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோவில் புதிதாக புனரமைக்கப்பட்டு நேற்று கும்பாபிேஷகம் நடந்தது.
நேற்று காலை, 5:45 மணிக்கு கணபதி பிரார்த்தனை, தேவி மஹத்ய ஹோமம், சண்டி ஹோமம், பிராண பிரதிஷ்டாபன ஹோமம், மஹா பூர்ணாஹூதி, கலசம் புறப்படுதல் ஆகியவை நடந்தன. 9:00 மணி முதல், 10:30 மணிக்குள், மஹாராஜகணபதி, பட்டாளம்மன், கவுரிசங்கர், பாலமுருகர், வாசுகி நாகாலம்மன், துர்கா பரமேஸ்வரி, தித்யாதி நவகிரகங்கள் மற்றும் ராஜகோபுர விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிேஷகம் நடந்தது.