/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
துவங்காத என்.ஹெச்., பால சீரமைப்பு பணி; மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு
/
துவங்காத என்.ஹெச்., பால சீரமைப்பு பணி; மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு
துவங்காத என்.ஹெச்., பால சீரமைப்பு பணி; மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு
துவங்காத என்.ஹெச்., பால சீரமைப்பு பணி; மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு
ADDED : ஜூலை 12, 2025 12:57 AM
ஓசூர், :ஓசூரில், பழுதான பாலத்தை சீரமைக்காமல் தேசிய நெடுஞ்சாலைத்துறை உள்ள நிலையில், மாவட்ட கலெக்டர் நேற்று ஆய்வு செய்தார்.
ஓசூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், 2002ம் ஆண்டு உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. இதன் பில்லர் பகுதியில் இருக்கும் பேரிங் கடந்த மாதம், 21ம் தேதி பழுதானதால், பாலம் வழக்கமான இடத்தில் இருந்து, முக்கால் அடி அளவிற்கு விலகியுள்ளது. அதனால், பாதுகாப்பு கருதி பாலத்தின் வழியாக, பெங்களூரு செல்லும் கார் போன்ற இலகு ரக வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. கனரக வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
ஒரு மாதத்தில் பணிகள் முடிந்து விடும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், தேசிய நெடுஞ்சாலைத்துறை இதுவரை பணிகளை துவங்கவில்லை. இதனால், ஓசூர் நகரில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில், ஓசூர் ஹில்ஸ் ஓட்டலில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நேற்று மாலை துவங்கிய புத்தக திருவிழாவை துவங்கி வைக்க வந்த கலெக்டர் தினேஷ்குமார், பழுதான பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பணிகளை விரைவாக துவங்கி, பழுதை சரி செய்ய தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை வலியுறுத்தினார். மேலும், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஓசூர் சிப்காட் ஜங்ஷன் உயர்மட்ட மேம்பால பணிகளை பார்வையிட்டு, விரைந்து முடிக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார்.