sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை இல்லை; கனமழையில் மாணவ, மாணவியர் அவதி

/

பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை இல்லை; கனமழையில் மாணவ, மாணவியர் அவதி

பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை இல்லை; கனமழையில் மாணவ, மாணவியர் அவதி

பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை இல்லை; கனமழையில் மாணவ, மாணவியர் அவதி


ADDED : டிச 13, 2024 09:04 AM

Google News

ADDED : டிச 13, 2024 09:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரத்தில், பரவலாக மழை பெய்தும், விடுமுறை அறிவிப்பு இல்லா-ததால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் கடும் அவ-திக்கு ஆளாகினர்.

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்ற-ழுத்த தாழ்வு பகுதியால், தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி கிருஷ்-ணகிரி மாவட்டத்திலும் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்கிறது. நேற்று காலையிலும் கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், பர்கூர் உள்-ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரத்தில் நேற்று அதி-காலை முதல், கனமழை பெய்த போதும், பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கவில்லை.

தமிழகத்தின், 27 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கனமழை எச்சரிக்கை விடுத்தபோதும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரிக-ளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதில்லை. கடந்த சில வாரங்களுக்கு முன் பெய்த கனமழையின் போதும், மதியத்திற்கு மேல் கலெக்டர் விடுப்பு அறிவித்தார். இதனால் மாணவர்கள் மழையில் நனைந்தவாறே வீடுகளுக்கு திரும்பினர்.

நேற்றும் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிப்பை எதிர்பார்த்திருந்த பெற்றோர், காலை, 8:00 மணி வரை அறிவிப்பு வெளியாகா-ததால், மழையில் நனைந்தபடி டூவீலர்களில் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச்-சென்றனர். அதேபோல், பள்ளி, கல்லுாரி முடியும் நேரத்திலும், பரவலாக மழை பெய்து வந்ததால், மாணவர்கள் நேற்றும் நனைந்தபடியே வீடுக-ளுக்கு திரும்பினர்.






      Dinamalar
      Follow us