/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
விலை கேட்க ஆளில்லை; முள்ளங்கி தோட்டத்தை அழித்த விவசாயி
/
விலை கேட்க ஆளில்லை; முள்ளங்கி தோட்டத்தை அழித்த விவசாயி
விலை கேட்க ஆளில்லை; முள்ளங்கி தோட்டத்தை அழித்த விவசாயி
விலை கேட்க ஆளில்லை; முள்ளங்கி தோட்டத்தை அழித்த விவசாயி
ADDED : ஜன 20, 2025 06:48 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 5,000 ஏக்கருக்கு மேல் முள்ளங்கி சாகுபடி நடக்கிறது. 40 முதல், 45 நாட்களில் முள்ளங்கி அறுவடைக்கு தயாராகி விடும் என்பதால், விவசாயிகள் விரும்பி சாகுபடி செய்கின்றனர். ஏக்கருக்கு, 35,000 முதல், 40,000 ரூபாய் வரை செலவாகிறது. கடந்தாண்டு ஜன.,ல் ஒரு கிலோ முள்ளங்கி, 30 ரூபாய் வரை விற்றதால், விவசாயிகளுக்கு ஓரளவு லாபம் கிடைத்தது.
தற்போது கடந்த, 9 வரை கிலோ, 20 ரூபாய் வரை, ஓசூர் உழவர் சந்தையில் விற்ற முள்ளங்கியின் விலை படிப்படியாக சரிந்து, நேற்று கிலோ, 12 ரூபாய் என விற்றது. முள்ளங்கியை வியாபாரிகள் விவசாயிகளின் தோட்டங்களுக்கு நேரடியாக சென்று வாங்கி வருவது வழக்கம். சாகுபடி நல்ல நிலையில் இருந்தும், வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். இதனால், கெலமங்கலம் அருகே, காடு உத்தனப்பள்ளியை சேர்ந்த விவசாயி பிரகாஷ், 50, தன், 2 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்திருந்த முள்ளங்கியை, டிராக்டரை ஓட்டி நேற்று அழித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், ''முள்ளங்கியை விலைக்கு கேட்க ஆளில்லை. அவற்றை பறித்து மார்க்கெட்டிற்கு கொண்டு சென்றால், பறிப்பு கூலி, வாகன செலவுக்கு கூட கட்டுப்படியாகாது. அதனால் டிராக்டர் ஓட்டி அழித்து வருகிறோம்,'' என்றார்.