/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மானியம் வழங்கவில்லை; குறைதீர் கூட்டத்தில் புகார்
/
மானியம் வழங்கவில்லை; குறைதீர் கூட்டத்தில் புகார்
ADDED : ஆக 23, 2025 01:21 AM
கிருஷ்ணகிரி கடந்த, 2 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு மானியங்கள் வழங்கவில்லை என, குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், டி.ஆர்.ஓ., சாதனைகுறள் தலைமையில் நேற்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், விவசாயிகள் பேசிய விபரம் வருமாறு;
விவசாயி ராமகவுண்டர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, 2 ஆண்டுகளாக துவரை, அவரை, உழவு, உரம் உள்ளிட்ட, 12 வகையான மானியங்கள் விவசாயிகளுக்கு வழங்கவில்லை. மானியம் பெற, ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் விண்ணப்பித்து காத்திருக்கின்றனர்.
டி.ஆர்.ஓ., சாதனைகுறள்: மானியங்கள், 15 நாட்களுக்குள் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அனுமந்தராவ்: அகரம், காளிக்கோவில், கீழ்பூங்குருத்தி உள்ளிட்ட பகுதிகளில், அரசு குடியமர்த்திய ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு, 70 ஆண்டுகளாக பட்டா வழங்கவில்லை.
டி.ஆர்.ஓ.,: விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சுப்ரமணி: வேளாண்மை, தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கப்படும் மானியங்கள் குறித்து விவசாயிகளுக்கு தெரிவிப்பதில்லை.
டி.ஆர்.ஓ.,: மத்திய, மாநில அரசு கள் விவசாயிகளுக்கு வழங்கும் திட்டங்கள் குறித்து அச்சிட்டு வழங்கப்படும்.
கணேஷ்ரெட்டி: தேன்கனிக்கோட்டை தாலுகாவில், மின்
வாரியத்தில் முறைகேடுகள்
அதிகளவில் நடப்பதை தடுக்க, ஒரே இடத்தில் நீண்டகாலமாக பணியாற்றி வரும் அலுவலர்களை இடமாற்றம் செய்ய வேண்டும்.
டி.ஆர்.ஓ.,: மின்வாரிய முறைகேடு புகார்கள் குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
சிவகுரு: போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், இ-நாம் முறையில் நடக்கும் ஏலம் குறித்து வெளிப்
படையாக தெரிவிக்க வேண்டும்.
விற்பனை கூட கண்காணிப்பாளர் பழனியம்மாள்: ஏலம் குறித்து விவசாயிகள் தனிப்பட்ட முறையில் எப்போது கேட்டாலும் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு கூட்டம் நடந்தது.