/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பள்ளிசாரா கல்வி பணியாளர் சங்க ஆலோசனை கூட்டம்
/
பள்ளிசாரா கல்வி பணியாளர் சங்க ஆலோசனை கூட்டம்
ADDED : நவ 25, 2024 01:30 AM
கிருஷ்ணகிரி: தமிழ்நாடு கல்வித்துறை பள்ளிசாரா கல்வி பணியாளர் சங்கத்தின், மாவட்ட, ஒன்றிய ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரியில் நடந்-தது.
ஒன்றிய தலைவர் பானுப்பிரியா தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் அப்துல் அமீத், மாநில பிரசார செயலாளர் ஜெயபாலன், மாநில பொருளாளர் உஷா, மாநில மகளிர் அணி பத்மா, மாவட்ட தலைவர் பார்த்தீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் செந்தில் கோரிக்கை குறித்து பேசினார். கூட்டத்தில், உதகையில் நடந்த அரசு அலுவலர் ஒன்றிய, மத்திய செயற்குழு கூட்டத்தில், பள்ளி சாரா பணியாளர்கள் சங்கத்தின் கோரிக்கையை தீர்மானமாக நிறைவேற்றியதற்கு நன்றி தெரி-வித்துக் கொள்வது. கிராமங்களிலுள்ள அண்ணா மறுமலர்ச்சி திட்ட நுாலகங்களில் பள்ளி சாரா பணியாளர்களை பணியமர்த்த வேண்டும். கிராமங்களில் உள்ள ஊர்ப்புற நுாலகங்களில் பள்ளி சாரா கல்வி பணியாளர்களை நுாலகராக பணியமர்த்த வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்-டன.