/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
டூவீலர் உதிரிபாகம் திருட்டு வடமாநில தொழிலாளி கைது
/
டூவீலர் உதிரிபாகம் திருட்டு வடமாநில தொழிலாளி கைது
ADDED : நவ 06, 2025 12:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், ஓசூர், சிவசக்தி நகரை சேர்ந்தவர் மணிவண்ணன், 61. இருசக்கர வாகன உதிரிபாகங்கள் தயார் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு, ஓசூர் மூக்கண்டப்பள்ளி சிவாஜி நகரில் தங்கி, அசாம் மாநிலத்தை சேர்ந்த பிரதான் நாத், 39, என்பவர், மிஷின் ஆப்பரேட்டராக பணியாற்றி வந்தார்.
கடந்த, 2ம் தேதி மதியம், 2:00 மணிக்கு, நிறுவனத்தில் இருந்த, 10,000 ரூபாய் மதிப்புள்ள இருசக்கர வாகனங்களின் உதிரிபாகங்களை, பிரதான் நாத் திருடியதாக, உரிமையாளர் மணிவண்ணன், நேற்று முன்தினம் அளித்த புகார் படி, சிப்காட் போலீசார், தொழிலாளி
பிரதான்நாத்தை கைது செய்தனர்.

