sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அரசு பள்ளியில் தமிழ் பயிலும் வடமாநில குழந்தைகள்

/

அரசு பள்ளியில் தமிழ் பயிலும் வடமாநில குழந்தைகள்

அரசு பள்ளியில் தமிழ் பயிலும் வடமாநில குழந்தைகள்

அரசு பள்ளியில் தமிழ் பயிலும் வடமாநில குழந்தைகள்


ADDED : பிப் 17, 2025 02:54 AM

Google News

ADDED : பிப் 17, 2025 02:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூர் அருகே அரசு நடுநிலைப்பள்ளியில், தமிழக மாணவர்க-ளுக்கு இணையாக, வடமாநில குழந்தைகளும், தமிழ் படித்து அசத்துகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், உத்தரபிரதேசம், மத்திய பிர-தேசம், பீஹார் உட்பட பல்வேறு வடமாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி, தொழிற்சாலை, ரோஜா தோட்டம், செங்-கல்சூளை, கோழிப்பண்ணைகளில் பணிபுரிகின்றனர். தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்துள்ளனர். குறிப்பாக பேடரப்பள்ளி, உளிவீரனப்பள்ளி, பேலகொண்டப்பள்ளி, கொத்த-கொண்டப்பள்ளியில் அரசு பள்ளிகளில் வடமாநில குழந்தைகள் அதிகமாக படிக்கின்றனர்.

இதேபோல் ஓசூர் அருகே ஜீமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் அதிக எண்ணிக்கையில் வடமாநில குழந்தைகள் படிக்-கின்றனர். இங்கு எல்.கே.ஜி., முதல், 8ம் வகுப்பு வரை, 180 மாணவ, மாணவியர் கல்வி பயில்கின்றனர். இதில், 90 பேர் வட-மாநில குழந்தைகள். இப்பள்ளியில் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி மொழியிலும் பாடம் கற்று கொடுக்-கப்படுகிறது. ஆனாலும் வடமாநில குழந்தைகள், தமிழ் மொழியில் ஆர்வத்துடன் கல்வி கற்கின்றனர். தமிழ்த்தாய் வாழ்த்து, திருக்குறள் ஆகியவற்றை கூறி அசத்துகின்றனர். பள்-ளியில் தலைமையாசிரியர் ராஜப்பா உட்பட எட்டு ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.

இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: தமிழக அரசின் காலை உணவு திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் மாணவ, மாணவியருக்கு ஆண்டுக்கு, 4 இலவச சீருடை மற்றும் நோட்டு புத்தகங்கள், எழுது பொருள்கள், காலணி, பை இலவசமாக கிடைக்கிறது.

இதனால் ஈர்க்கப்படும் வடமாநில தொழிலாளர்கள், தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் அதிகம் சேர்த்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக, அரசு பள்ளிகளில் வடமாநில குழந்-தைகள் சேர்க்கை அதிகரித்துள்ளது. தமிழக மாணவ, மாணவிய-ருக்கு இணையாக, சில பள்ளிகளில் வட மாநில குழந்தைகள் படிக்கின்றனர்.

இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us