/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சத்துணவு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
சத்துணவு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 18, 2025 02:32 AM
கிருஷ்ணகிரி:
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் தர்ணா போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மணி தலைமை வகித்தார். சங்க உறுப்பினர்கள் ராதா, லட்சுமி, சுமதி, சாந்தி முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன், மாவட்ட செயலாளர் ஜெகதாம்பிகா கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
இதில், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம், 9,000 ரூபாய் வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்கள் ஓய்வு பெறும்போது பணிக்கொடையாக ரூபாய் 5 லட்சம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.மீன்வளத்துறை சங்க மாவட்ட பொருளாளர் நந்தகுமார், சாலைப்பணியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் திம்மராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.