/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அவ்வப்போது பெய்து வரும் மழைகே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ADDED : மே 08, 2025 12:53 AM
கிருஷ்ணகிரி,:அக்னி நட்சத்திரம் கடந்த, 4ல் துவங்கியது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மார்ச் மாதம் முதல் வெயில் கடுமையாக பொதுமக்களை வாட்டி வரும் நிலையில், அக்னி நட்சத்திரம் துவங்கிய நாள் முதல் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது.
கடந்த ஒரு வாரமாக மாவட்டம் முழுவதும் அவ்வப்போது லேசானது முதல் கன மழை பெய்து வருகிறது. இதனால் இரவில் வெப்பத்தின் தாக்கம் சற்று தணிந்திருந்தாலும், பகலில் வெப்பம் அதிகரித்தே காணப்படுகிறது.
போதிய மழையின்றி, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு கடந்த ஏப்., 30ல், இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக நீர்வரத்து முற்றிலும் நின்றது. பின்னர் அவ்வப்போது பெய்த லேசான மழையால், மே 1 முதல், 12 கன அடியாக நீர்வரத்து துவங்கியது.
நேற்று முன்தினம் அணைக்கு, 150 கன அடியாக இருந்த நீர்வரத்து கடந்த வாரம் பெய்த மழையால் நேற்று, 310 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து, 12 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் மொத்தம் உயரமான, 52 அடியில் நேற்று, 49.90 அடியாக இருந்தது. அவ்வப்போது பெய்து வரும் மழையால், ஓரிரு நாளில் அணை நீர்மட்டம், 50 எடியை எட்ட உள்ளது.