/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரியில் நாளை முதல் ஆட்சி மொழி சட்ட வாரவிழா
/
கிருஷ்ணகிரியில் நாளை முதல் ஆட்சி மொழி சட்ட வாரவிழா
கிருஷ்ணகிரியில் நாளை முதல் ஆட்சி மொழி சட்ட வாரவிழா
கிருஷ்ணகிரியில் நாளை முதல் ஆட்சி மொழி சட்ட வாரவிழா
ADDED : டிச 16, 2025 06:20 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை முதல் வரும், 26 வரை ஆட்சிமொழி சட்ட வார விழா நடக்கிறது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் இயற்றப்பெற்ற 1956, டிச., 27- நாளை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் ஆட்சிமொழி சட்ட வாரம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நாளை முதல் வரும், 26 வரை ஒருவார காலத்திற்கு ஆட்சிமொழி சட்ட வாரம் கொண்டாடப்படுகிறது.
ஆட்சி மொழிச் சட்ட வாரவிழா கொண்டாட்டங்களின் நிகழ்வுகளாக கணினி தமிழ் விழிப்புணர்வு கருத்தரங்கம், ஆட்சிமொழி மின்காட்சியுரை, தமிழில் குறிப்புகள், வரைவுகள் எழுதுவதற்கான பயிற்சி, வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகைகள் அமைத்திடுவதற்கு வலியுறுத்தி வணிக நிறுவன உரிமையாளர்கள், வணிக நிறுவன அமைப்புகளுடன் கூட்டம், பட்டிமன்றம், ஆட்சிமொழித் திட்ட விளக்கக் கூட்டம், விழிப்புணர்வுப் பேரணி ஆகியவை நடக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

