/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
/
கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ADDED : டிச 16, 2025 06:20 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு கடந்த மாதம், 24 முதல் கடந்த, 13 வரை தொடர்ந்து, 19 நாட்களாக தலா, 563 கன அடிநீர் வந்து கொண்டிருந்தது. அணை நீர்மட்டம், 50 அடியாக இருந்ததால், அணைக்கு வந்து கொண்டிருக்கும் தண்ணீர் முழுவதும் பாசன கால்வாய் மற்றும் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டிருந்தது. பின்னர் மழையின்றி கடந்த, 14ல், 420 கன அடியாக நீர்வரத்து குறைந்தது.
ஆனால், ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து அதிக அளவு நீர் திறப்பால், நேற்று கே.ஆர்.பி., அணைக்கு, 540 கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது. அணையில் இருந்து, பாசன கால்வாய் மற்றும் தென்பெண்ணை ஆறு என மொத்தம், 772 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் மொத்தமுள்ள, 52 அடியில் நேற்று, 48.95 அடியாக நீர்மட்டம் இருந்தது.

