/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அசுத்த நீரில் கீரைகளை சுத்தம் செய்த வியாபாரிகளுக்கு அதிகாரி எச்சரிக்கை

ADDED : பிப் 16, 2024 09:59 AM
ஓசூர்: சூளகிரி சுற்றுவட்டாரத்திலுள்ள விவசாய நிலத்தில், கொத்தமல்லி, புதினா, கீரைகள் அதிகம் பயிரிடப்படுகிறது. இவற்றை, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர்.
இந்நிலையில், சூளகிரி - பேரிகை சாலையில் உள்ள துரை ஏரியில் அசுத்தமான நீரில், கீரைகளை வியாபாரிகள் சுத்தம் செய்துள்ளனர். துரை ஏரியில் நீர் துர்நாற்றம் வீசியும், மீன்கள் செத்தும் மிதக்கின்றன. இந்த அசுத்தமான நீரில் கீரைகளை வியாபாரிகள் சுத்தம் செய்வதால், பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் அளித்த புகார்படி, சூளகிரி சுகாதார ஆய்வாளர் தினேஷ்குமார், துரை ஏரிக்கு சென்று அங்கிருந்த வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் இது போன்ற, அசுத்தமான நீரில் கீரைகளை சுத்தம் செய்தால், பொதுமக்களுக்கு பல்வேறு நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இது போன்ற அசுத்தமான நீரில், கீரைகளை சுத்தம் செய்யக்கூடது என்றும் எச்சரித்து அனுப்பினார்.