sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மக்கள்தொகை கணக்கெடுப்பு முன்சோதனை அஞ்செட்டியில் ஆய்வு செய்த அதிகாரிகள்

/

மக்கள்தொகை கணக்கெடுப்பு முன்சோதனை அஞ்செட்டியில் ஆய்வு செய்த அதிகாரிகள்

மக்கள்தொகை கணக்கெடுப்பு முன்சோதனை அஞ்செட்டியில் ஆய்வு செய்த அதிகாரிகள்

மக்கள்தொகை கணக்கெடுப்பு முன்சோதனை அஞ்செட்டியில் ஆய்வு செய்த அதிகாரிகள்


ADDED : நவ 16, 2025 02:42 AM

Google News

ADDED : நவ 16, 2025 02:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அஞ்செட்டி: அஞ்செட்டி தாலுகாவில், மக்கள்தொகை கணக்கெடுப்பு முன்சோ-தனை பணியை, மாவட்ட கலெக்டர் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குனர் ஆய்வு செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி தாலுகாவில் முன்சோதனை மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி கடந்த, 10ம் தேதி துவங்கி-யது. நேற்று முன்தினம் வரை, கிராமங்களில் உள்ள வீடுகள் கணக்கெடுப்பு பணி நடந்தது. நேற்று முதல் நேரடியாக வீடுக-ளுக்கு சென்று மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி மேற்கொள்-ளப்படுகிறது. இப்பணியை, மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குனர் சுந்-தரேஷ் பாபு, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து, சுந்தரேஷ்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:

வரும், 30ம் தேதி வரை நேரடியாக வீடு, வீடாக சென்று மக்கள்-தொகை கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. மாடக்கல், தக்கட்டி, உரிகம், கோட்டையூர், மஞ்சுகொண்டப்-பள்ளி, அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், தொட்டமஞ்சி ஆகிய, 8 பஞ்.,க்களில் உள்ள, 105 குக்கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு கணக்கெடுப்பு பணிகள் நடக்கின்றன.

வீடுகளின் வகைகள், அறைகளின் எண்ணிக்கை, குடும்ப உறுப்பி-னர்கள் விபரம், குடிநீர், காஸ் இணைப்பு, இணையதள இணைப்பு, லேப்டாப், மொபைல்போன் உள்ளிட்ட, 34 கேள்வி-களுக்கான பதில்கள் சேகரிக்கப்படும்.

நாடு சுதந்திரம் அடைந்த பின் நடக்கும், 8வது மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியாகும். 2027ம் ஆண்டு டிஜிட்டல் முறையில் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

அதற்கான செயலிகள் அஞ்செட்டி போன்ற மலை கிராமங்களில், சரியாக செயல்படுகிறதா என்பன உட்பட பல்வேறு பிரச்னை-களை கண்டுபிடித்து சரிசெய்வதற்காக தான், முன்சோதனை அஞ்-செட்டி தாலுகாவில் நடக்கிறது.

இவ்வாறு, அவர் கூறினார்.

ஆய்வின் போது, மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் இணை இயக்குனர் சின்னதுரை, துணை இயக்குனர் வாசுதேவன், உதவி இயக்குனர் இளையராஜா, தாசில்தார் செந்தில்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us