/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு பள்ளிகளில் குழந்தைகள் தின விழா
/
அரசு பள்ளிகளில் குழந்தைகள் தின விழா
ADDED : நவ 15, 2025 02:10 AM
கெலமங்கலம்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேடரப்பள்ளி மாநகராட்சி நடுநி-லைப்பள்ளியில், குழந்தைகள் தின விழா நேற்று கொண்டாடப்-பட்டது.
மாணவ, மாணவியருக்கு நடனம், விளையாட்டு மற்றும் பேச்சுப்-போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற, 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் மற்றும் கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற, 80 மாணவர்களுக்கு, பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை, பள்ளி தலைமையாசிரியர் பொன்நாகேஷ், கவுன்சிலர் ரஜினி, தொழில-திபர் ஞானவேல் ஆகியோர் வழங்கினர்.
பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் லக்கப்பா, ரமேஷ், செல்-லப்பா, சுந்தரமூர்த்தி, ரவி மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் விஜி, விஜய், சுகன்யா, நாராயணரெட்டி, சர-வணன், ரவி உட்பட பலர் பங்கேற்றனர்.
*கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியம், ஆனே-கொள்ளு பஞ்., உட்பட்ட தொட்டபேளூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், குழந்தைகள் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் வெங்க-டேசலு தலைமை வகித்து, மாணவ, மாணவியருக்கு இனிப்பு வழங்கினார். மேலும், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

