ADDED : மார் 14, 2024 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கல்லாவி பகுதியில் நேற்று காலை, 9:45 மணிக்கு சென்னையிலிருந்து கோவை எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது.
அப்போது கல்லாவி தாசம்பட்டியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி மீது, அந்த ரயில் மோதியதில், உடல் சிதறி மூதாட்டி பலியானார். விசாரணையில், ஆனந்துார் அருகே உள்ள ரெட்டிப்பட்டியை சேர்ந்த மூக்கியம்மாள், 60, என்பதும், கல்லாவியிலுள்ள வங்கியில் முதியோர் உதவித்தொகையை எடுக்க சென்றபோது, ரயில் மோதி பலியானதும் தெரிந்தது. சேலம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

