ADDED : அக் 28, 2024 03:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகிலுள்ள சுண்டேகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னபிள்ளை, 75. இவர் நேற்று காலை, 6:00 மணிக்கு, மொபட்டில் தன் பெரிய மகன் ராஜாமணியுடன் சுண்டே குப்பத்-திலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்றார். பின்னால் வந்த மகேந்-திரா சைலோ கார் மோதியது.
இதில் இருவரும் துாக்கி வீசப்பட்டனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சின்னபிள்ளை உயிரிழந்தார். ராஜாமணி சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து, கே.ஆர்.பி., அணை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

