ADDED : நவ 26, 2026 02:25 AM
அ நிறம் | அளவு
ஓசூர்:தென்காசி மாவட்டம்,
சங்கரன்கோவில் அண்ணா நகரை சேர்ந்தவர் சங்கர், 68. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரிலுள்ள பாகலுார் சாலை திருப்பதி நகரில் தங்கியிருந்தார்.
கடந்த, 23ம் தேதி, அசைவ உணவு வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு அவரது மகள் பூர்ணிமா, 35, இம்மாதம் முழுவதும் சைவ உணவு மட்டுமே வீட்டில் சமைக்கப்படும் என கூறியுள்ளார்.
இந்நிலையில், அன்று மாலை, 6:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்ற சங்கர், மீண்டும் திரும்பி வரவில்லை. அவரது மகள் பூர்ணிமா புகார் படி, முதியவரை ஹட்கோ போலீசார் தேடி வருகின்றனர்.
