ADDED : ஏப் 18, 2025 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி,மத்துார் அடுத்த திப்பம்பட்டியை சேர்ந்தவர் கமலாம்மாள், 85. இவர் நேற்று முன்தினம் இரவு, தன் வீட்டில் படுத்து துாங்கி கொண்டிருந்தார். அப்போது அவரை கண்ணாடிவிரியன் பாம்பு கடித்துள்ளது.
அலறித்துடித்து கூச்சலிட்ட கமலாம்மாவை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, ஊத்தங்கரை அரசு மருத்துவமனக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்தார். மத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

