/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓம் சக்தி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்
/
ஓம் சக்தி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்
ADDED : பிப் 23, 2024 04:24 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த மிட்டள்ளிபுதுார் கூட்ரோட்டில் ஓம்சக்தி கோவில் அமைந்துள்ளது. இதன் நுாதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம், விக்னேஸ்வர பூஜை, கணபதி, லட்சுமி, நவக்கிரஹ ஹோமம், கோ பூஜையுடன் துவங்கியது. தென்பெண்ணை ஆற்றிலிருந்து பெண்கள் தீர்த்தக்குடங்களுடன் ஓம் சக்தி அம்மன் சிலையை எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். மாலை, 5:30 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை, முதற்கால யாகபூஜை, அம்மன் சிலைக்கு கண் திறப்பு, சிலை பிரதிஷ்டை செய்தல், தீபாராதனை ஆகியவை நடந்தன.
நேற்று காலை, 2ம் கால யாக பூஜை, கடம் புறப்பாடு ஆகியவை நடந்தன. காலை, 8:40 மணிக்கு, ஓம்சக்தி அம்மன் கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி நுாதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.