/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓம்காளியம்மன், வீரபத்ர சுவாமி கோவில் மஹா கும்பாபிஷேகம்
/
ஓம்காளியம்மன், வீரபத்ர சுவாமி கோவில் மஹா கும்பாபிஷேகம்
ஓம்காளியம்மன், வீரபத்ர சுவாமி கோவில் மஹா கும்பாபிஷேகம்
ஓம்காளியம்மன், வீரபத்ர சுவாமி கோவில் மஹா கும்பாபிஷேகம்
ADDED : மே 30, 2025 01:05 AM
கிருஷ்ணகிரி :கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஜீவா நகரிலுள்ள ஓம்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை, கணபதி பூஜை, கொடியேற்றம், கலச ஸ்தாபனம் நடந்தது.
நேற்று காலை, 9:00 மணிக்கு, கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பெண்கள் பால்குடங்களை ஊர்வலமாக கொண்டு சென்று, ஓம்காளியம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து அம்மனுக்கு ஆராதனை, சிறப்பு அலங்காரம் நடந்தது. இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
* தேன்கனிக்கோட்டை, குடியூர் கிராமத்திலுள்ள வீரபத்ர சுவாமி, நந்தீஸ்வரர், தட்சிணா மூர்த்தி, லிங்கோத்பவ, பிரம்மதேவர் மற்றும் சிகரகலச பிரதிஷ்ட மஹா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் மதியம், கங்கை பூஜை, கோ பூஜை, வீரகாசி நடனத்துடன் ஊர்வலம் நடந்தது. நேற்று காலை கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இதை, திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.