/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வரும் 24ல், எரிவாயு குறைதீர் நாள் கூட்டம்
/
வரும் 24ல், எரிவாயு குறைதீர் நாள் கூட்டம்
ADDED : ஜூன் 22, 2024 02:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி
மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்ட
குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மூலம்
நடத்தப்படும், எரிவாயு நுகர்வோர் முகவர்களுடனான மாதாந்திர
கலந்தாய்வு கூட்டம் வரும், 24 மாலை, 4:00 மணிக்கு மாவட்ட கலெக்டர்
அலுவலகத்தில், டி.ஆர்.ஓ., சாதனைக்குறள் தலைமையில் நடக்கிறது.
கூட்டத்தில் அனைத்து எரிவாயு முகவர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன
பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர். நுகர்வோர்கள் தங்கள் குறைகளை
நேரடியாக தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.