/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் வாலிபரை கொன்ற வழக்கில் ஒருவர் கைது
/
ஓசூர் வாலிபரை கொன்ற வழக்கில் ஒருவர் கைது
ADDED : நவ 28, 2025 01:08 AM
ஓசூர், நஓசூர் நியூ ஏ.எஸ்.டி.சி., ஹட்கோவை சேர்ந்தவர் கோகுல்ராஜ், 22. இவரை கடந்த, 17ல், சிலர் அடித்து கொன்று, கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அடுத்த ஆந்திர மாநில எல்லைக்கு உட்பட்ட ஓ.என்.கொத்துார் ஏரியில், மர்மநபர்கள் வீசி சென்றனர்.
ஓசூர் டவுன் போலீசார் ஆந்திரா சென்று விசாரணை மேற்கொண்டனர். சிவகங்கை மாவட்டம், வேலாங்குளத்தை சேர்ந்த பிளம்பர் முருகேசன், 35 என்பவர், அதேபகுதியை சேர்ந்த அழகுராஜா என்பவரை கொலை செய்த வழக்கில் கைதாகி, ஜாமினில் வெளிவந்ததும், ஓசூரில் தங்கியிருந்த முருகேசனின் நடவடிக்கையை கண்காணித்து, எதிர் தரப்பினருக்கு தகவல் அளித்ததால், கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டதும் தெரிந்தது.
இது குறித்து முருகேசன் மற்றும் அவரது கூட்டாளிகள் நால்வரை, ஓசூர் டவுன் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் இக்கொலையில் தொடர்புடைய கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அடுத்த கொங்கோஜிகொத்துாரை சேர்ந்தவரும், தற்போது ஓசூர், சிவக்குமார் நகர், 5வது தெருவில் வசித்து வருபவருமான அருள்ராஜ், 28, என்பவரை, போலீசார் கைது செய்தனர்.

