/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூரிலிருந்து சபரிமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்
/
ஓசூரிலிருந்து சபரிமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்
ADDED : நவ 28, 2025 01:07 AM
ஓசூர், ஓசூரில் இருந்து, இன்று முதல் (28ம் தேதி) சபரிமலைக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து, அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள அறிக்கை: கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடக்கும் மண்டல பூஜை, மகர விளக்கு ஆகிய திருவிழாக்களின் போது, தமிழகத்தில் ஐயப்ப பக்தர்கள் சென்று வர, அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
அதன்படி தற்போது, ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் கரூர் பகுதியில் உள்ள ஐயப்ப பக்தர்கள் பயன்பெறும் வகையில், அதி நவீன குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பஸ் இன்று (28ம் தேதி) முதல் வரும், 2026ம் ஆண்டு ஜன., 16 வரை இயக்கப்படுகிறது. மேலும், சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பின் படி டிச., 27- முதல், டிச., 30- வரை கோவில் நடை சாத்தப்படுவதால், டிச., 26 முதல், டிச., 29 வரை, இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப் படமாட்டாது. குழுவாக செல்லும் பக்தர்களுக்கு, வாடகை அடிப்படையில் பஸ் வசதி செய்து தரப்படும். எனவே, பயணிகள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணிக்கலாம். 90 நாட்களுக்கு முன்னதாக இச்சிறப்பு பஸ்கன் ஆன்லைன் மூலமாக, www.tnstc.in மற்றும் TNSTC Official app ஆகிய இணையத்தளங்களில் முன்பதிவு செய்துகொள்ளலாம். மேலும், பஸ்களின் விபரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்கு, 94450 14424 மற்றும் 94450 14463 ஆகிய மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

