/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
செல்லியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்
/
செல்லியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்
ADDED : நவ 28, 2025 01:07 AM
கிருஷ்ணகிரி, நபெரியமுத்துார் கிராமத்திலுள்ள, செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
கிருஷ்ணகிரி அடுத்த பெரியமுத்துார் கிராமத்தில் அமைந்துள்ள செல்லியம்மன் கோவில், மஹா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை, கணபதி ஹோமம், காப்பு கட்டுதல், முளைப்பாரி ஊர்வலம், கங்கை பூஜை, தீர்த்தம் கொண்டு வருதல் ஆகியவையும், மாலை, கோ பூஜை, வாஸ்து சாந்தி, கணபதி ஹோமம், வாஸ்து ஹோமம், கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், கணபதி பூஜை, முதற்கால யாக பூஜை ஆகியவை நடந்தது.
நேற்று காலை, 2ம் கால யாக பூஜை, வேதபாராயணம், கடம் புறப்பாடு ஆகியவையும், 10:45 மணிக்கு, செல்லியம்மன் கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து, செல்லியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. விழாவில், ஹிந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் ராமுவேல், மண்டல இணை ஆணையர் கிருஷ்ணன், சரக ஆய்வாளர் ராமமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் கவுரப்பன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.

