/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் த.மா.கா., வாசன் வரவேற்பு
/
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் த.மா.கா., வாசன் வரவேற்பு
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் த.மா.கா., வாசன் வரவேற்பு
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் த.மா.கா., வாசன் வரவேற்பு
ADDED : பிப் 18, 2024 10:14 AM
ஓசூர்: ''ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை வரவேற்கிறோம்,'' என, த.மா.கா., தலைவர் வாசன் கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், நேற்று அவர் கூறியதாவது:
பெங்களூரு - ஓசூர் இடையே மெட்ரோ ரயில் நீட்டிப்பு என்பது அவசியம் மட்டுமல்ல, அவசர தேவை. இதை உணர்த்து, தமிழக, கர்நாடகா மாநில அரசுகள் இணைந்து, விரைவில் மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். கர்நாடகா சட்டசபையில், காங்., தலைமையிலான அரசு, மேகதாது அணை கட்டுவதை உறுதியோடு வெளிப்படுத்தி உள்ளனர். இது தமிழக விவசாயிகளுக்கு மிகுந்த வேதனை, வருத்தத்தை அளித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு, கர்நாடகா மாநில அரசிடம் கண்டிப்புடன் பேச வேண்டும்.
லோக்சபா தேர்தலில் த.மா.கா., கூட்டணி முடிவை விரைவில் அறிவிப்போம். மத்திய அரசு கொடுத்த நிதியை, தமிழக அரசு வெளிப்படை தன்மையோடு செயல்படுத்த வேண்டும். ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை, த.மா.கா., ஆதரிக்கிறது. அதன் மூலம் பல லட்சம் செலவு மிச்சமாகும். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.