/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர், போச்சம்பள்ளி சிப்காட்டில் குழந்தைகள் காப்பகம் திறப்பு
/
ஓசூர், போச்சம்பள்ளி சிப்காட்டில் குழந்தைகள் காப்பகம் திறப்பு
ஓசூர், போச்சம்பள்ளி சிப்காட்டில் குழந்தைகள் காப்பகம் திறப்பு
ஓசூர், போச்சம்பள்ளி சிப்காட்டில் குழந்தைகள் காப்பகம் திறப்பு
ADDED : அக் 14, 2025 02:08 AM
போச்சம்பள்ளி, தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் பல்வேறு பகுதியிலுள்ள சிப்காட் வளாகங்களில், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறையின் சார்பில், 16 புதிய குழந்தைகள் காப்பகம் மற்றும் மெகா உணவு பூங்கா உள்ளிட்டவைகளை, காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
இதையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி, பர்கூர் சிப்காட் வளாகத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தை, கிருஷ்ணகிரி கலெக்டர் தினேஷ்குமார், பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன், சிப்காட் திட்ட அலுவலர் சிந்து உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி, 15 குழந்தைகள் அமரும் வகையில் அனைத்து வசதிகளுடன் உள்ள காப்பகத்தை, நேற்று திறந்து வைத்தனர். இதில் மத்துார், தி.மு.க., ஒன்றிய செயலாளர் வசந்தரசு, ஓலா நிறுவன பி.ஆர்.ஓ., ரவிசங்கர் மற்றும் முன்னணி தொழில் நிறுவனங்களை சேர்ந்த உயர்நிலை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
* ஓசூர், சிப்காட் வளாகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை சார்பில் குழந்தைகள் காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் வேலைக்கு செல்லும் பெண்கள், 6 வயதிற்கு உட்பட்ட தங்களது குழந்தைகளை, விட்டு பணிக்கு செல்லலாம். அதன் பின் வந்து, அழைத்து செல்லலாம். இங்கு குழந்தைகளுக்கான உணவு மற்றும் அவர்களுக்கான ஆரம்ப கல்வியறிவு போன்றவை வழங்கப்படும்.
ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா ஆகியோர் குத்துவிளக்கேற்றி, குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினர். துணை மேயர் ஆனந்தய்யா, சிப்காட் திட்ட அலுவலர்கள் சிந்து, ராஜ்குமார், மண்டல தலைவர் ரவி, கவுன்சிலர் ஸ்ரீதர், ஹோஸ்டியா சங்க பொருளாளர் வடிவேல் உட்பட பலர்
பங்கேற்றனர்.