/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பன்னோக்கு மருத்துவ மையம் திறப்பு
/
மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பன்னோக்கு மருத்துவ மையம் திறப்பு
மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பன்னோக்கு மருத்துவ மையம் திறப்பு
மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பன்னோக்கு மருத்துவ மையம் திறப்பு
ADDED : ஏப் 05, 2025 01:39 AM
மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பன்னோக்கு மருத்துவ மையம் திறப்பு
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி நகராட்சி, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை பழைய வளாகத்தில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பன்னோக்கு மருத்துவ மையம் மற்றும் 5 வயதிற்குட்பட்ட கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மறுவாழ்வு மையம் துவக்க விழா நடந்தது.
மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்து பேசியதாவது: திருநங்கைகள், திருநம்பிகளுக்கு தேவையான புறநோயாளிகள் பிரிவு, உள்
நோயாளிகள் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஹார்மோன் சிகிச்சை, மனநல சிகிச்சை, உட்சுரப்பியல் சிகிச்சை, சிறுநீரக அறுவை சிகிச்சை, சீரமைப்பு அறுவை சிகிச்சை, தோல் மருத்துவம் போன்ற பல்வேறு சிறப்பு மருத்துவ சேவை அளிக்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, 19.3 சதவீதம் குறைந்த எடையாலும், 29 சதவீதம் வளர்ச்சி குறைபாட்டாலும், 10.4 சதவீதம் தசை விரயத்தாலும், 4.7 சதவீதம் கடுமையான தசை விரயத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த குழந்தைகளின் நலனுக்காக, ஊட்டச்சத்து மறுவாழ்வு மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகளுக்கு சிகிச்சை, ஊட்டச்சத்து உணவுகள் வழங்குவது குறித்த பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு பேசினார்.
மருத்துவ கல்லுாரி முதல்வர் பூவதி, மருத்துவ கண்காணிப்பாளர் சந்திரசேகரன், துணை முதல்வர் சாத்விகா, உள்ளிருப்பு மருத்துவ அலுவலர்கள் செல்வராஜ், மது, மாவட்ட சமூகநல அலுவலர் சக்தி சுபாசினி, மனநல மருத்துவர் வாணிஸ்ரீ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.