ADDED : அக் 24, 2025 12:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி ஒன்றியம் பெல்லாரம்பள்ளி தொடக்க வேளாண் கடன் சங்கத்தின், சிக்கபூவத்தி ரேஷன் கடையில் இருந்து பிரித்து, சிக்கபூவத்தி இருளர் காலனி கிராமத்தில், புதிதாக பகுதி நேர ரேஷன்கடை திறப்பு விழா நடந்தது.
கிருஷ்ணகிரி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்குமார், பகுதி நேர ரேஷன்கடையை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் மற்றும் இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர் சூர்யா, முன்னாள் ஒன்றிய குழுத்தலைவர் அம்சாராஜன், மாவட்ட மகளிரணி தலைவி சுகந்தி மாது, முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயராமன், ராஜன், ஊர் கவுண்டர்கள் சந்திரன், திம்மன், மந்திரி கவுண்டர் சூடப்பன் உள்பட பலர்
பங்கேற்றனர்.

