/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஒகேனக்கல் குடிநீர் குழாய் ஏர்வால்வு சேதத்தால் பல லட்சம் லிட்டர் நீர் வீண்

ADDED : அக் 24, 2025 12:53 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அடுத்த அவதானப்பட்டி ஏரியில் இருந்து பாலேகுளி ஏரிக்கு செல்லும் கால்வாய் மீது ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய் செல்கிறது.
இங்கு, ஒகேனக்கல் குடிநீர் குழாயில் இருந்து இணைப்பு எடுத்து, ஏர் வால்வு மற்றும் ஏர்பைப் அமைத்துள்ளனர். இந்த ஏர்வால்வு பழுதடைந்தும், ஏர் பைப் முற்றிலும் சேதமடைந்தும் உள்ளது. இதனால் ஆண்டுக்கணக்கில் இதிலிருந்து குடிநீர் வீணாகி கால்வாயில் செல்கிறது.
இதனால், கிருஷ்ணகிரி நகர மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதோடு, பல லட்சம் லிட்டர் ஒகேனக்கல் குடிநீர் வீணாகி வருகிறது. எனவே, சேதமான ஏர்பைப்பை மாற்றி, புதிய ஏர்வால்வு அமைக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.