/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மனநலம் பாதித்தோருக்கான மீட்பு மையம் திறப்பு
/
மனநலம் பாதித்தோருக்கான மீட்பு மையம் திறப்பு
ADDED : ஜூலை 04, 2024 05:57 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, அரசு மருத்துவக் கல்லுாரியில், தேசிய சுகாதார நல வாழ்வு இயக்கம் சார்பில், அமைக்கப்பட்ட அவசர சிகிச்சை மற்றும் மன நல மீட்பு மையத்தை, மாவட்ட கலெக்டர் சரயு திறந்து வைத்து பேசியதாவது:சாலைகளில் சுற்றித்திரியும் மன நலம் பாதிக்-கப்பட்டவர்கள், வீடுகளில் பராமரிக்க முடியாத-வர்கள் குறித்து, மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தால், இங்குள்ள பணியாளர்கள் மூல-மாக மீட்கப்பட்டு, மருத்துவ பரிசோதனை செய்து, இந்த காப்பகத்தில் சேர்க்கப்படுவர். பின் அவர்களின் நல்வாழ்விற்காக உரிய சிகிச்சை வழங்கப்படும். இந்த மையத்தில் பணியாற்று வோர், மிகப்பெரிய தொண்டினை செய்வதால், அவர் களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர் பூவதி, கண்காணிப்பாளர் சந்திரசே-கரன், உறைவிட மருத்துவர்கள் மது, செல்-வராஜ், தன்னார்வ தொண்டு நிறுவன தலைவர் ஜலாலுதீன், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.