ADDED : மார் 05, 2024 12:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: ஓசூர் அருகே டி.பாரந்துார் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இயங்குகிறது. இங்க போதிய கழிவறை இல்லாததால், புதிய கழிவறை கட்டித்தர, தலைமையாசிரியர் சாரதா கோரிக்கை விடுத்தார்.
இதையேற்று, டைட்டன் இன்ஜினியரிங் அண்ட் ஆட்டோமேஷன் நிறுவனம், தங்களது சமூக பொறுப்புணர்வு நிதியில் இருந்து, 9 லட்சம் ரூபாய் ஒதுக்கியது. வட்டார கல்வி அலுவலரிடம் உரிய அனுமதி பெற்று, 4 கழிப்பறைகள் கட்டி கொடுத்தது. ஓசூர் சப் கலெக்டர் பிரியங்கா, மாணவ, மாணவியர் பயன்பாட்டிற்கு கழிவறைகளை நேற்று திறந்து வைத்தார்.

