/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தி.மு.க., சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
/
தி.மு.க., சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
ADDED : மே 05, 2024 01:57 AM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி,
திருவண்ணாமலை மேம்பாலம் அருகில் மற்றும் பர்கூர் ஒன்றியம்
பி.ஆர்.ஜி., மாதேப்பள்ளி, போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டி ஆகிய மூன்று
இடங்களில் தி.மு.க., சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது.
தி.மு.க., இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் தினேஷ்ராஜன், துணை அமைப்பாளர்
மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணகிரி, தி.மு.க.,
கிழக்கு மாவட்ட செயலர் மதியழகன் எம்.எல்.ஏ., தண்ணீர்பந்தலை திறந்து
வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி, இளநீர், ஜூஸ்
உள்ளிட்டவற்றை வழங்கினார். தொடர்ந்து அஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி
மைதானத்தில் நடந்த, 11ம் ஆண்டு கிரிக்கெட் போட்டியை துவக்கி வைத்தார்.
தி.மு.க.,
மாவட்ட அவைத்தலைவர் தட்ரஹள்ளி நாகராஜ், இளைஞரணி துணை அமைப்பாளர்
லயோலா ராஜசேகர், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம் வெங்கடேசன்,
ஒன்றிய செயலர்கள் உள்ளிட்ட, தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.