/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'சட்டம் ஒழுங்கை காக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராட வேண்டும்'
/
'சட்டம் ஒழுங்கை காக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராட வேண்டும்'
'சட்டம் ஒழுங்கை காக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராட வேண்டும்'
'சட்டம் ஒழுங்கை காக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராட வேண்டும்'
ADDED : ஜன 04, 2025 07:15 AM
தர்மபுரி: ''சட்டம் ஒழுங்கை காக்க, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராட வேண்டும்,'' என, பா.ஜ., மாநில துணைத்தலைவர் ராம-லிங்கம் கூறினார்.
தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பாரத மாதா ஆலய வளா-கத்தில், 2022ல், வழிபட வந்தபோது, தடையை மீறி பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தது தொடர்பான வழக்கில், பா.ஜ., மாநில துணைத் தலைவர் ராமலிங்கம், தர்மபுரி நீதிமன்றத்தில் ஆஜராக நேற்று வந்தார்.
அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கேடு மற்றும் பல்வேறு பிரச்னைகளை, தி.மு.க., அரசு சந்தித்து கொண்டிருக்கிறது.
கட்சி பொறுப்பு மற்றும் ஆட்சி பொறுப்பில் இருப்பவர்கள் தவறு செய்யும்போது, அவர்களை முதல்வர் தட்டி கேட்ப-தில்லை. அண்ணா பல்கலை மாணவியின் பரிதாப நிலைக்கு காரணமும், தி.மு.க., நிர்வாகிகள் தொடர்பு தான். இன்று, 'யார் அந்த சார்' என பலரும் கேட்கும் நிலையில், அவர் யார் என்று ஆட்சியாளர்கள் வெளிப்படையாக சொல்லி விட்டால், பிரச்னை முடிவுக்கு வரும்.
தி.மு.க.,-வை எதிர்க்கும் கட்சிகள் தனித்தனியாக
போராடுவதை விட, ஒன்றிணைந்து
தமிழகத்தின் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க போராட வேண்டும். அமைச்சர் துரைமுருகன் வீடுகளில் நடக்கும் அமலாக்கத்துறை சோதனைக்கு, பா.ஜ., எப்படி காரணமாகும். நடவடிக்கைக்கு உள்ளாகும், தி.மு.க.,-வினரில் சிலர், நீதிமன்றம் சென்று விடு-தலை ஆகின்றனர். நடவடிக்கைகளின் பின்னணியில், பா.ஜ., இருந்தால், எப்படி அவர்கள் விடுதலையாக முடியும்.
மத்திய அரசு, உள்ளாட்சி நிர்வாகங்களின் மேம்பாட்டுக்காக ஏரா-ளமாக நிதி வழங்குகிறது. மாநில அரசின் தவறுகளால் தான் திட்-டங்கள் மக்களுக்கு சென்று சேர்வதில்லை.
இவ்வாறு கூறினார்.