/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் மாநகராட்சியுடன் தொரப்பள்ளியை இணைக்க எதிர்ப்பு
/
ஓசூர் மாநகராட்சியுடன் தொரப்பள்ளியை இணைக்க எதிர்ப்பு
ஓசூர் மாநகராட்சியுடன் தொரப்பள்ளியை இணைக்க எதிர்ப்பு
ஓசூர் மாநகராட்சியுடன் தொரப்பள்ளியை இணைக்க எதிர்ப்பு
ADDED : ஜன 14, 2025 02:13 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், தொரப்பள்ளி அக்ரஹாரம் பஞ்.,த்தை சேர்ந்த, 50க்கும் மேற்பட்டோர், மாவட்ட கலெக்டர் அலுவல-கத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:தொரப்பள்ளி அக்ரஹாரம் பஞ்.,ல் குமுதேபள்ளி, எல்லம்மா கொத்துார், காந்தி நகர் மற்றும் வள்ளலார் நகர், அக்சயா கார்டன், சாய் கார்டன், காமராஜ் காலனி, வெங்கடேஸ்வரா லேஅவுட், உள்-ளிட்ட பகுதிகள் உள்ளன.
தொரப்பள்ளி அக்ரஹாரம் பஞ்., மொத்தம், 4,801 ஏக்கர் நிலம் உள்ளது. இதில், 4,400 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள். காந்தி நகர் பகுதிகளில் மட்டும், 1,100 ஏக்கருக்கு அதிகமாக விவ-சாயம், மற்றும் கால்நடை வளர்க்கும் தொழில் உள்ளது. மேலும் பலர், ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை நம்பி உள்ளனர். இப்பகுதிகள் வழியாக கெலவரப்பள்ளி அணையின் பாசன கால்வாய், 4 கி.மீ., செல்கிறது. பெரும்பாலான குடும்பங்கள் வறுமை கோட்டிற்கு கீழ் பின்தங்கி உள்ளது.எனவே, இப்பகுதிகளை மாநகராட்சியோடு இணைத்தால், வரு-டத்திற்கு, 2 முறை வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்த முடியாது.தற்போது வரை எங்கள் பகுதியில் வீட்டு வரி, 110 ரூபாய் முதல், 330 ரூபாய் வரை மட்டுமே வசூலிக்கப்படுகிறது.ஆனால், மாநகராட்சி யோடு இணைக்கப்பட்டால் பல மடங்கு உயரும் அபாயம் உள்ளது. எனவே, தொரப்பள்ளி அக்ரஹாரம் பஞ்.,த்தை ஓசூர் மாநகராட்சியோடு இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.