sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மொபைல் டவர் அமைக்க எதிர்ப்பு; மண்பரிசோதனைக்கு வந்தவர்களுடன் வாக்குவாதம்

/

மொபைல் டவர் அமைக்க எதிர்ப்பு; மண்பரிசோதனைக்கு வந்தவர்களுடன் வாக்குவாதம்

மொபைல் டவர் அமைக்க எதிர்ப்பு; மண்பரிசோதனைக்கு வந்தவர்களுடன் வாக்குவாதம்

மொபைல் டவர் அமைக்க எதிர்ப்பு; மண்பரிசோதனைக்கு வந்தவர்களுடன் வாக்குவாதம்


ADDED : ஆக 02, 2024 11:56 PM

Google News

ADDED : ஆக 02, 2024 11:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மொபைல் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொக்லைனுடன் மண் பரிசோதனைக்கு வந்தவர்களிடம் அப்ப-குதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரியில், திருவண்ணாமலை பைபாஸ் சாலையை-யொட்டி குமரன் நகர், சாய்பாபா நகர், கணபதி நகர் உள்ளிட்ட பகுதிகளில், 300 குடும்பங்களை சேர்ந்த, ஆயிரத்திற்கும் மேற்-பட்டோர் வசிக்கின்றனர்.

இந்த குடியிருப்புகளின் நடுவே தனியார் நிறுவன மொபைல் டவர் அமைக்க, மண் மாதிரி சேக-ரிப்பதற்காக நேற்று, பொக்லைனுடன் சிலர் வந்தனர். ஆனால், அப்பணிக்கான உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லை. இதையறிந்து அப்பகுதியை சேர்ந்த, 100க்கும் மேற்-பட்டோர் அங்கு திரண்டு, மொபைல் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.கிருஷ்ணகிரி டவுன் போலீசார் அங்கு வந்தனர். போலீசாரிடம் அப்பகுதி மக்கள், 'ஏற்கனவே நகராட்சி குப்பையை இப்பகு-தியில் எரிப்பதாலும், இரு டவர்கள் ஏற்கனவே அமைக்கப்பட்-டுள்ளதாலும் மக்கள் பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகி இறந்துள்ளனர். இந்நிலையில் இன்னொரு மொபைல் டவர் அமைத்தால் கதிர்வீச்சு பாதிப்பால் மேலும் பாதிக்கப்பட வாய்ப்-புள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டரை சந்தித்து முறையிட-வுள்ளோம்.' என, கூறினர்.இதையடுத்து போலீசார், 'டவர் அமைக்கும் பணிக்காக, மண் சேகரிக்கும் பணிக்கு வந்தவர்களிடம் உரிய ஆவணம் எடுத்து வந்து அதன் பின் இங்கு பணியை தொடருங்கள். தற்போது எந்-தப்பணியும் செய்யக்கூடாது' என, எச்சரித்து அனுப்பினர்.






      Dinamalar
      Follow us