/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மருதேரி பட்டாளம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு எதிர்ப்பு
/
மருதேரி பட்டாளம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு எதிர்ப்பு
மருதேரி பட்டாளம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு எதிர்ப்பு
மருதேரி பட்டாளம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு எதிர்ப்பு
ADDED : ஆக 30, 2025 01:11 AM
போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த மருதேரி கிராமத்தில் பட்டாளம்மன் கோவில் அமைந்துள்ளது. 12 கிராமங்களுக்கு உட்பட்ட பங்காளிகளுக்கு சொந்தமானதாகும்.
ஆனால், இதில் ஒரு தரப்பினர், நான்கு ஆண்டுகளுக்கு முன், கோவிலை இடித்து புதிதாக கட்டும் பணியில் ஈடுபட்டனர். தற்போது, கட்டுமான பணி முடிந்து, நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கி, செப்., 4ல் கும்பாபிஷேகம் நடப்பதாக நோட்டீஸ் வினியோகம் செய்தனர்.
ஆனால், 12 கிராமங்களின் பெயர்களை குறிப்பிடாமல், தன்னிச்சையாக விழா நடத்துவதாக கூறி, 12 கிராமங்களை சேர்ந்த பங்காளிகள், போச்சம்பள்ளி அறநிலையத்துறை அதிகாரிகள், கிருஷ்ணகிரி கலெக்டர் ஆகியோரிடம், கும்பாபிஷேகம் நடத்த தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை மனு அளித்தனர். இதற்கிடையே, மருதேரி கிராமத்தில் உள்ள ஒரு சிலர், நேற்று கும்பாபிஷேகத்திற்கு கொடி மரம் நட்டனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது.
பர்கூர் டி.எஸ்.பி., முத்து
கிருஷ்ணன் தலைமையில், 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போச்சம்பள்ளி தாசில்தார் சத்யா முன்னிலையில், இன்று பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காணப்படுவதாக கூறியதையடுத்து, அங்கு கூடிய மக்கள் கலைந்து சென்றனர்